Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enna Paakkiyam - என்ன பாக்கியம் எவர்க்குண்டு

என்ன பாக்கியம், எவர்க்குண்டு
இந்தச் சிலாக்கியம்?

விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,
மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன

1. வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?
ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது — என்ன

2. சாமியைக் கண்டேன் – மகானந்தம் – சாலவுங்கொண்டேன்,
காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,
கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும் — என்ன

3. அன்னமும் நீயே – கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;
மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?
மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ? — என்ன

4. போதும் இவ்வாழ்வு – பரகதி – போவேன் இப்போது;
ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;
எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது — என்ன

Enna Paakkiyam Lyrics in English

Enna paakkiyam, evarkkunndu inthach silaakkiyam? Vinnnavarum, puvimaevum munivarkalum, mannavarung kaannaa makipanai yaan kanntaen — enna 1. Vaanakan thaano – allathithu – vaiyakan thaano? Aanakam sentu eluntha arumporul kaanakan thannil en kaiyil amarnthathu — enna 2. Saamiyaik kanntaen – makaanantham – saalavungaொnntaen, kaamaru thaengani vaaykal thutippathum, kannnum manamum kalikka vilippathum — enna 3. Annamum neeyae – kitaiththarkarunj sonnamum neeyae; minnaraு maekath thirukkai thuranthaiyo? Maethini thannai ratchikkap piranthaiyo? — enna 4. Pothum ivvaalvu – parakathi – povaen ippothu; aethaen enta paratheesum vanthittathu; ennnnillaatha selvam en kaiyil kittuthu — enna

PowerPoint Presentation Slides for the song Enna Paakkiyam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Paakkiyam – என்ன பாக்கியம் எவர்க்குண்டு PPT
Enna Paakkiyam PPT

கண்டேன் தானோ கையில் நீயே பாக்கியம் எவர்க்குண்டு இந்தச் சிலாக்கியம் விண்ணவரும் புவிமேவும் முனிவர்களும் மன்னவருங் காணா மகிபனை யான் என்ன வானகந் அல்லதிது தமிழ்