Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enna Kaanikkai Padaipean - என்ன காணிக்கை படைப்பேன்

பல்லவி

என்ன காணிக்கை படைப்பேன்? – நான்
இம்மை மறுமைப் பரன் திரு நாமத்தில்

அனுபல்லவி

பண்ணினேன் பரிசுத்தப் பலியாகவென்னை
என்னுயிரைவிட யாதுண்டு வேறே

1. எல்லாஞ் சமூலமாய்த் தந்தேன் – இனி
எனக்கு நீரே போதுமென்றுமைக் கொண்டேன்
தள்ளாதுகாத்தருள் தமியேன் நான் வந்தேன்
தஞ்சமென்றும்மை நான் சார்ந்து பணிந்தேன் – என்ன

2. அழைத்திட்டீர் ஊழியம் செய்ய – திவ்ய
ஆவியின் பட்டயம் அணிந்து நான் வெல்ல
சிலுவையை எடுத்தென்றும் தூயா பின்செல்ல
தேவா துணை புரி சாட்சி நான் சொல்ல – என்ன

3. என்னில் தங்கி அரசாள்வீர் – எந்தன்
இருதயத்தில் மெய்ச் சந்தோஷத்தைத் தருவீர்
மன்னா வாசலைத் திறந்தேன் நீர் வாரீர்
மகத்துவமாக நீர் பிரகாச மீவீர் – என்ன

Enna Kaanikkai Padaipean – என்ன காணிக்கை படைப்பேன் Lyrics in English

Pallavi enna kaannikkai pataippaen? – naan immai maraுmaip paran thiru naamaththil anupallavi pannnninaen Parisuththap paliyaakavennai ennuyiraivida yaathunndu vaeraே 1. Ellaanj samoolamaayth thanthaen – ini enakku neerae pothumentumaik konntaen thallaathukaaththarul thamiyaen naan vanthaen thanjamentummai naan saarnthu panninthaen – enna 2. Alaiththittir ooliyam seyya – thivya aaviyin pattayam anninthu naan vella siluvaiyai eduththentum thooyaa pinsella thaevaa thunnai puri saatchi naan solla – enna 3. Ennil thangi arasaalveer – enthan iruthayaththil meych santhoshaththaith tharuveer mannaa vaasalaith thiranthaen neer vaareer makaththuvamaaka neer pirakaasa meeveer – enna

PowerPoint Presentation Slides for the song Enna Kaanikkai Padaipean – என்ன காணிக்கை படைப்பேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Kaanikkai Padaipean – என்ன காணிக்கை படைப்பேன் PPT
Enna Kaanikkai Padaipean PPT

நீர் பல்லவி காணிக்கை படைப்பேன் இம்மை மறுமைப் பரன் திரு நாமத்தில் அனுபல்லவி பண்ணினேன் பரிசுத்தப் பலியாகவென்னை என்னுயிரைவிட யாதுண்டு வேறே எல்லாஞ் சமூலமாய்த் தந்தேன் தமிழ்