எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்து
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன் — என
மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே — என
என் காலைத் தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
இராப்பகல் உறங்காரே -என
வலப்பக்கத்தில் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே -என
எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய் —என
Enakkothaasai Varum எனக்கொத்தாசை வரும் Lyrics in English
Enakkoththaasai varum parvatham naeraay en kannkalai aeraெduppaen vaanamum poomiyum pataiththa valla thaevanidamirunthu ennnukkadangaa nanmaikal varumae en kannkal aeraெduppaen — ena malaikal peyarnthakantitinum nilaimaari puviyakantitinum maaridumo avar kirupai ennaalum aaraுthal enakkavarae — ena en kaalaith thallaada vottar ennaik kaakkum Dhevan urangaar isravaelaik kaakkum nal Dhevan iraappakal urangaarae -ena valappakkaththil nilal avarae valuvaamal kaappavar avarae sooriyan pakalil santhiran iravil sethappaduththaathae -ena eththeengum ennai anukaamal aaththumaavaik kaakkumen Dhevan pokkaiyum varaththaiyum paththiramaaka kaappaarae ithu muthalaay —ena
PowerPoint Presentation Slides for the song Enakkothaasai Varum எனக்கொத்தாசை வரும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakkothaasai Varum – எனக்கொத்தாசை வரும் PPT
Enakkothaasai Varum PPT

