எபினேசரே என் துணையாளரே
எந்நாளும் எம்மைக் காப்பவரே
இதுவரை எம்மை நடத்தி வந்தீர்
இனிமேலும் எம்மை ஏந்திச் செல்வீர்
கிருபையினால் எம்மைச் சூழ்ந்து கொண்டீர்
கனிவாக மார்போடு அணைத்துக் கொண்டீர்
இருளான பள்ளத்தாக்கில் நடந்த வேளை
இடறல்கள் என்னை வந்து சூழ்ந்த வேளை
அருகினில் வந்து நீர் அணைத்துக் கொண்டீர்
அக்கினி ஜுவாலையில் காத்துக் கொண்டீர்
கண்ணீரின் பாதையில் கைவிடவில்லை
கவலைகள் தீர்த்தீர் குறை வைக்கவில்லை
மாறாவின் கசப்பை மதுரமாக்கி
மகிமையாய் என்னைத் தேற்றிவிட்டீர்
உதவி வரும் பர்வதம் நீர்தானைய்யா!
உயிர் வாழும் காரணமும் நீர்தானைய்யா!
கர்த்தர் நீர் செய்த நன்மைகளை
நித்தமும் பாடிப் போற்றிடுவேன்
கன்மலை வெடிப்பினில் மறைத்து வைத்தீர்
காரிருள் வேளையில் ஒளியாய் வந்தீர்
எதிரிகள் முன்னொரு பந்தி வைத்தீர்
எண்ணெயால் தலையை அபிஷேகித்தீர்
சிங்கத்தின் கெபிக்குள் துணையாய் நின்றீர்
தீயினில் வேகாது காத்துக் கொண்டீர்
வாக்குத்தத்தங்களை நிறைவேற்றி
வல்லமை கரத்தால் ஏந்திக் கொண்டீர்
உதவி வரும் பர்வதம் நீர்தானைய்யா!
உயிர் வாழும் காரணமும் நீர்தானைய்யா!
கர்த்தர் நீர் செய்த நன்மைகளை
நித்தமும் பாடிப் போற்றிடுவேன்
கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறேன்
நடத்தி வந்த கிருபையை எண்ணிப் பார்க்கிறேன்
தோல்வி இல்லை உம்மைத் துதிக்கும் போது
சோர்வு இல்லை உம்மைப் பாடும் போது
எபினேசரே… எபினேசரே…
இதுவரை காத்தீர்… இனிமேலும் காப்பீர்…
நன்றி… நன்றி… என் இயேசுவே…
Ebenesarae En Thunaiyalaray Lyrics in English
Epinaesarae en thunnaiyaalarae ennaalum emmaik kaappavarae ithuvarai emmai nadaththi vantheer inimaelum emmai aenthich selveer kirupaiyinaal emmaich soolnthu konnteer kanivaaka maarpodu annaiththuk konnteer irulaana pallaththaakkil nadantha vaelai idaralkal ennai vanthu soolntha vaelai arukinil vanthu neer annaiththuk konnteer akkini juvaalaiyil kaaththuk konnteer kannnneerin paathaiyil kaividavillai kavalaikal theerththeer kurai vaikkavillai maaraavin kasappai mathuramaakki makimaiyaay ennaith thaettivittir uthavi varum parvatham neerthaanaiyyaa! Uyir vaalum kaaranamum neerthaanaiyyaa! Karththar neer seytha nanmaikalai niththamum paatip pottiduvaen kanmalai vetippinil maraiththu vaiththeer kaarirul vaelaiyil oliyaay vantheer ethirikal munnoru panthi vaiththeer ennnneyaal thalaiyai apishaekiththeer singaththin kepikkul thunnaiyaay ninteer theeyinil vaekaathu kaaththuk konnteer vaakkuththaththangalai niraivaetti vallamai karaththaal aenthik konnteer uthavi varum parvatham neerthaanaiyyaa! Uyir vaalum kaaranamum neerthaanaiyyaa! Karththar neer seytha nanmaikalai niththamum paatip pottiduvaen kadanthu vantha paathaiyaith thirumpip paarkkiraேn nadaththi vantha kirupaiyai ennnnip paarkkiraேn tholvi illai ummaith thuthikkum pothu sorvu illai ummaip paadum pothu epinaesarae… epinaesarae… ithuvarai kaaththeer… inimaelum kaappeer… nanti… nanti… en Yesuvae…
PowerPoint Presentation Slides for the song Ebenesarae En Thunaiyalaray
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Epinesare en thunaiyaalare – எபினேசரே என் துணையாளரே PPT
Epinesare en thunaiyaalare PPT

