பல்லவி
தேவசுதன் கிறிஸ்தேசு எமை மீட்கவே வந்தார்
ஏழையராய் பாவிகட்கோர் இரட்சகராய் நிற்பார் (2)
சரணங்கள்
1. அன்பினுக்கு அன்பாக அவனியில் வந்துதித்தார்
அன்று பல வான் தூதர் ஆர்ப்பரித்தேப் பாட
அவனியில் பலவும் அதிசயம் நிகழ
அருமையாய் வந்துதித்தார் (2) – தேவ
2. பாவத்தால் நொந்தவர்க்கு பரம வைத்தியரானார்
ஏதுமற்ற ஏழைகட்கு இருநிதியானாரே
துன்புறுவோர்க்கு துன்பங்கள் துடைத்து
துணைவராய் அணைத்திடவே (2) – தேவ
3. இவ்வுலகோர் ஈடேற பரகதி விட்டு வந்தார்
செவ்விய நல் உபதேசம் சீர் பெற அளித்திடவே
இனியராய் இரங்கி நலமது புரிய
நாடியே வந்தனரே (2) – தேவ
4. தன்னுயிரைப் பலி கொடுத்து நரர் உயிர் காத்திடவே
பாவிகளைப் பரிவுடனே பரலோகம் சேர்த்திடவே
கருணையின் கோனே காசரு மணியே
கனிவோடு அருள் புரிவீர் (2) – தேவ
5. பொல்லாத சிந்தைகளால் நிறைந்திட்ட உள்ளமதை
நல்வழிக்காய் திறந்து வைத்தால் இயேசதில் புகுந்திடுவார்
பாவங்கள் நீங்க பரிசுத்தப்படுத்தி
பாங்குடன் தாங்கிடுவார் (2) – தேவ
Devasudhan Krishthyesu Emai Meetkave Lyrics in English
pallavi thaevasuthan kiristhaesu emai meetkavae vanthaar aelaiyaraay paavikatkor iratchakaraay nirpaar (2) saranangal 1. anpinukku anpaaka avaniyil vanthuthiththaar antu pala vaan thoothar aarppariththaep paada avaniyil palavum athisayam nikala arumaiyaay vanthuthiththaar (2) – thaeva 2. paavaththaal nonthavarkku parama vaiththiyaraanaar aethumatta aelaikatku irunithiyaanaarae thunpuraுvorkku thunpangal thutaiththu thunnaivaraay annaiththidavae (2) – thaeva 3. ivvulakor eetaera parakathi vittu vanthaar sevviya nal upathaesam seer pera aliththidavae iniyaraay irangi nalamathu puriya naatiyae vanthanarae (2) – thaeva 4. thannuyiraip pali koduththu narar uyir kaaththidavae paavikalaip parivudanae Paralokam serththidavae karunnaiyin konae kaasaru manniyae kanivodu arul puriveer (2) – thaeva 5. pollaatha sinthaikalaal nirainthitta ullamathai nalvalikkaay thiranthu vaiththaal iyaesathil pukunthiduvaar paavangal neenga Parisuththappaduththi paangudan thaangiduvaar (2) – thaeva
PowerPoint Presentation Slides for the song Devasudhan Krishthyesu Emai Meetkave
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devasudhan Krishthyesu Emai Meetkave – தேவசுதன் கிறிஸ்தேசு எமை மீட்கவே வந்தார் PPT
Devasudhan Krishthyesu Emai Meetkave PPT

