Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Logamathil - தேவ லோகமதில்

பல்லவி

தேவ லோகமதில்
சேவிப்பார் தூயவர்கள்.

அனுபல்லவி

மாவலராகிய தேவன்றன் பலத்தால்-ரீ
பூவினில் ஜீவித்துப் புகழுறும் ஜெயம் பெற்றார். – தேவ

சரணங்கள்

1. வானமண்டலப் பொல்லா ஆவியின் சேனையோடும்-பல
மான துரைத்தனம், அதிகாரம், பிரபஞ்ச அதிபதியிவர்களோடும்
ஞானமாய்த் தேவ சர்வாயுதம் தரித்து,-ரீ-
நலமுடன் போராடி உலகினில் ஜெயங் கொண்டார். – தேவ

2. பட்டயம், நிர்வாணம், பசி, நாச மோசங்களும்,-மா
பாடு, வியாகுலத்தோடு, உபத்ரவம், பஞ்சமும் மிஞ்சி வந்தும்,
துட்டர்கள் கிட்டினும் மட்டில்லா அன்பரால்-ரீ-
துணிவுடன் முற்றிலும் ஜெயித்த விசுவாசிகள். – தேவ

3. பாரத்தையும், தமை நெஞ்கிய பாவத்தையும்,-தள்ளிப்
பட்சமுறும் யேசுரட்சகர்மீது தம் பார்வையை வைத்து என்றும்
வீரமாய் ஓடியே வெற்றி சிறந்தவர்,-ரீ-
வேகும் அக்கினியின் உக்கிரம் அவித்தவர். – தேவ

4. ஜெயங் கொள்ளுவோர் பரதீசினில் வீற்றிருப்பார்,-வாடா
ஜீவகிரீடம் அணிந்தாளுகை செய்வார், ஜீவகனி புசிப்பார்,
வியப்புறு புது நாமம், வெள்ளுடை பெற்றுமே-ரீ-
விடிவெள்ளியாய் நித்யம் விளங்கி ஜொலித்திடுவார். – தேவ

Deva Logamathil – தேவ லோகமதில் Lyrics in English

pallavi

thaeva lokamathil
sevippaar thooyavarkal.

anupallavi

maavalaraakiya thaevantan palaththaal-ree
poovinil jeeviththup pukalurum jeyam pettaாr. – thaeva

saranangal

1. vaanamanndalap pollaa aaviyin senaiyodum-pala
maana thuraiththanam, athikaaram, pirapanja athipathiyivarkalodum
njaanamaayth thaeva sarvaayutham thariththu,-ree-
nalamudan poraati ulakinil jeyang konndaar. – thaeva

2. pattayam, nirvaanam, pasi, naasa mosangalum,-maa
paadu, viyaakulaththodu, upathravam, panjamum minji vanthum,
thuttarkal kittinum mattillaa anparaal-ree-
thunnivudan muttilum jeyiththa visuvaasikal. – thaeva

3. paaraththaiyum, thamai nenjkiya paavaththaiyum,-thallip
patchamurum yaesuratchakarmeethu tham paarvaiyai vaiththu entum
veeramaay otiyae vetti siranthavar,-ree-
vaekum akkiniyin ukkiram aviththavar. – thaeva

4. jeyang kolluvor paratheesinil veettiruppaar,-vaadaa
jeevakireedam anninthaalukai seyvaar, jeevakani pusippaar,
viyapputru puthu naamam, vellutai pettumae-ree-
vitivelliyaay nithyam vilangi joliththiduvaar. – thaeva

PowerPoint Presentation Slides for the song Deva Logamathil – தேவ லோகமதில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Logamathil – தேவ லோகமதில் PPT
Deva Logamathil PPT

தேவ ஜெயங் பல்லவி லோகமதில் சேவிப்பார் தூயவர்கள் அனுபல்லவி மாவலராகிய தேவன்றன் பலத்தால்ரீ பூவினில் ஜீவித்துப் புகழுறும் ஜெயம் பெற்றார் சரணங்கள் வானமண்டலப் பொல்லா ஆவியின் தமிழ்