பல்லவி
பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்.
அனுபல்லவி
முயன்று உழைத்தே பலனை உண்பான்
முடிவில் பாக்யம் மேன்மை காண்பான்.
சரணங்கள்
1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்,
தண்ணிழல் திராட்சைக் கொடிபோல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்.
2. ஒலிவமரத்தை சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
மெலிவிலா நல்ல பாலருன் பாலே
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே.
3. கர்த்தருன் வீட்டை கட்டாவிடில் அதைக்
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள்
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
Bayanthu Kartharin Paathaiyil – பயந்து கர்த்தரின் பாதை யதனில் Lyrics in English
Pallavi payanthu karththarin paathai yathanil panninthu nadappon paakkiyavaan. Anupallavi muyantu ulaiththae palanai unnpaan mutivil paakyam maenmai kaannpaan. Saranangal 1. Unnnutharkiniya kanikalaith tharum, thannnnilal thiraatchaைk kotipol valarum kannnniya manaivi makilnthu iruppaal ennnarum nalangal illaththil purivaal. 2. Olivamaraththai soolnthu maelae uyarum pachchilang kantukal polae melivilaa nalla paalarun paalae mikavum kaliththu vaalvar anpaalae. 3. Karththarun veettaை kattavitil athaik kattuvor muyarsi veennaam ari ithai karththaraal varum suthanthiram pillaikal karppaththin kaniyum karththarin kirupai
PowerPoint Presentation Slides for the song Bayanthu Kartharin Paathaiyil – பயந்து கர்த்தரின் பாதை யதனில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bayanthu Kartharin Paathaiyil – பயந்து கர்த்தரின் பாதை யதனில் PPT
Bayanthu Kartharin Paathaiyil PPT

