Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Athikaalayil Ummai Theduvean - அதிகாலையிலுமைத் தேடுவேன்

பல்லவி

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெபத்தாலே

அனுபல்லவி

இதுகாறும் காத்த தந்தை நீரே;
இனிமேலும் காத்தருள் செய்வீரே,
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே! – அதி

சரணங்கள்

1. போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! – எப்
போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா
ஈனப்பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா?
எனக்கான ஈசனே! வான ராசனே!
இந்த நாளிலும் ஒரு பந்த மில்லாமல் காரும் நீதா! – அதி

2. பல சோதனைகளால் சூழ்ந்து நான் கலங்கிடும்போது – தப்
பாது நின் கிருபை தாங்கிடவேணும் அப்போது
விலகாது என் சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? – அதி

3. நரர் யாவர்க்கு முற்ற நண்பனாய் நடந்திடவையே! – தீ
நாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
பரலோக ஆவியை நல் மாரிபோலெனிலே பெய்யே!
புகழான நாதனே! வேத போதனே!
பூரணமாய் உனைப் போற்றுவேன், தினம்தினம் மெய்யே – அதி

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalayil Ummai Theduvean Lyrics in English

Pallavi athikaalaiyilumaith thaeduvaen mulu manathaalae thaevaaseer vaatham pera naaduvaen jepaththaalae anupallavi ithukaaraுm kaaththa thanthai neerae; inimaelum kaaththarul seyveerae, pathivaaka ummilae naan nilaikkavae, paththiramaay enai uththamanaakkidum thaevae! – athi saranangal 1. Pona raamuluvathum paathukaaththarulina pothaa! – ep pothum engaludaniruppathaay uraiththa nal naathaa eenappaavikkaethu thunnai lokilunndu porpaathaa? Enakkaana eesanae! Vaana raasanae! Intha naalilum oru pantha millaamal kaarum neethaa! – athi 2. Pala sothanaikalaal soolnthu naan kalangidumpothu – thap paathu nin kirupai thaangidavaenum appothu vilakaathu en samookam enta vaakkil thavaraேthu? Visuvaasang konndu meyp paasamoonntida vikkinam yaavilum vetti kaanuvaen malaivaethu? – athi 3. Narar yaavarkku mutta nannpanaay nadanthidavaiyae! – thee naavin paavamara nanmaikal molinthidach seyyae! Paraloka aaviyai nal maaripolenilae peyyae! Pukalaana naathanae! Vaetha pothanae! Pooranamaay unaip pottaுvaen, thinamthinam meyyae – athi

PowerPoint Presentation Slides for the song அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalayil Ummai Theduvean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athikaalayil Ummai Theduvean – அதிகாலையிலுமைத் தேடுவேன் PPT
Athikaalayil Ummai Theduvean PPT

அதி நல் பல்லவி அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெபத்தாலே அனுபல்லவி இதுகாறும் காத்த தந்தை நீரே இனிமேலும் காத்தருள் தமிழ்