Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Arul Maari Engumaaka - அருள் மாரி எங்குமாக

1. அருள் மாரி எங்குமாக

பெய்ய, அடியேனையும்

கர்த்தரே, நீர் நேசமாக

சந்தித்தாசீர்வதியும்;

என்னையும், என்னையும்

சந்தித்தாசீர்வதியும்.

2. என் பிதாவே, பாவியேனை

கைவிடாமல் நோக்குமேன்;

திக்கில்லா இவ்வேழையேனை

நீர் அணைத்துக் காருமேன்;

என்னையும், என்னையும்

நீர் அணைத்துக் காருமேன்.

3. இயேசுவே, நீர் கைவிடாமல்

என்னைச் சேர்த்து ரட்சியும்;

ரத்தத்தாலே மாசில்லாமல்

சுத்தமாக்கியருளும்;

என்னையும், என்னையும்

சுத்தமாக்கியருளும்.

4. தூய ஆவீ, கைவிடாமல்

என்னை ஆட்கொண்டருளும்;

பாதை காட்டிக் கேடில்லாமல்

என்றும் காத்துத் தேற்றிடும்;

என்னையும், என்னையும்

என்றும் காத்துத் தேற்றிடும்.

5. மாறா சுத்த தெய்வ அன்பும்,

மீட்பர் தூய ரத்தமும்,

தெய்வ ஆவி சக்திதானும்

மாண்பாய்த் தோன்றச்செய்திடும்;

என்னிலும், என்னிலும்

மாண்பாய்த் தோன்றச்செய்திடும்.

Arul Maari Engumaaka Lyrics in English

1. Arul maari engumaaka peyya, atiyaenaiyum karththarae, neer naesamaaka santhiththaaseervathiyum; ennaiyum, ennaiyum santhiththaaseervathiyum. 2. En pithaavae, paaviyaenai kaividaamal Nnokkumaen; thikkillaa ivvaelaiyaenai neer annaiththuk kaarumaen; ennaiyum, ennaiyum neer annaiththuk kaarumaen. 3. Yesuvae, neer kaividaamal ennaich serththu ratchiyum; raththaththaalae maasillaamal suththamaakkiyarulum; ennaiyum, ennaiyum suththamaakkiyarulum. 4. Thooya aavee, kaividaamal ennai aatkonndarulum; paathai kaattik kaetillaamal entum kaaththuth thaettidum; ennaiyum, ennaiyum entum kaaththuth thaettidum. 5. Maaraa suththa theyva anpum, meetpar thooya raththamum, theyva aavi sakthithaanum maannpaayth thontachcheythidum; ennilum, ennilum maannpaayth thontachcheythidum.

PowerPoint Presentation Slides for the song Arul Maari Engumaaka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arul Maari Engumaaka – அருள் மாரி எங்குமாக PPT
Arul Maari Engumaaka PPT

என்னையும் நீர் கைவிடாமல் சந்தித்தாசீர்வதியும் அணைத்துக் காருமேன் சுத்தமாக்கியருளும் தூய காத்துத் தேற்றிடும் தெய்வ மாண்பாய்த் தோன்றச்செய்திடும் என்னிலும் அருள் மாரி எங்குமாக பெய்ய தமிழ்