Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaviyai Malai Pole Ootrum - ஆவியை மழைபோலே யூற்றும் பல

ஆவியை மழைபோலே யூற்றும், – பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.

பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியை

1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும். — ஆவியை

2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். — ஆவியை

3. காத்திருந்த பல பேரும் – மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். — ஆவியை

4. தோத்திரக் கீதங்கள் பாடி – எங்கும்
சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். — ஆவியை

Aaviyai Malai Pole Ootrum Lyrics in English

Aaviyai malaipolae yoottaுm, – pala aadukalai yaesu manthaiyir koottum. Paavikkaay jeevanaivitta kiristhae, parinthu neer paesiyae irangidach seyyum, — aaviyai 1. Anpinaal jeevanai vittir – aavi arul maari poliyavae paralokanj senteer inpap perukkilae pongi makila aeraalamaana janangalaich serum. — aaviyai 2. Sitharaுnndalaikira aattaைp – pinnum thaetip pitiththu neer thookkich sumanthu, patharaathae naanthaan un nal maeyppan yaesu paakkiyarennum nal vaakkaiyarulum. — aaviyai 3. Kaaththiruntha pala paerum – manang katinangaொllaa munnae um paathanj serum thoththirak geethangal paatip pukalnthu suththalokam varath thooyaavi oottaுm. — aaviyai 4. Thoththirak geethangal paati – engum suvishaesa jeyaththaiyae nitham nitham thaetip paaththiraraaka anaekarelumpap Parisuththa aaviyin arulmaari oottaுm. — aaviyai

PowerPoint Presentation Slides for the song Aaviyai Malai Pole Ootrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyai Malai Pole Ootrum – ஆவியை மழைபோலே யூற்றும் பல PPT
Aaviyai Malai Pole Ootrum PPT

ஆவியை யேசு நீர் சேரும் தேடிப் நல் தோத்திரக் கீதங்கள் ஊற்றும் நிதம் மழைபோலே யூற்றும் ஆடுகளை மந்தையிற் கூட்டும் பாவிக்காய் ஜீவனைவிட்ட தமிழ்