ஆரிடத்தினில் ஏகுவோம்?
பல்லவி
ஆரிடத்தில் ஏகுவோம்?-எம் ஆண்டவனே,
ஆரிடத்தில் ஏகுவோம்?
அனுபல்லவி
ஆரிடத்தில் ஏகுவோம்? சோராநித்திய ஜீவ
நேரார் வசனங்கள் உம்சாரில் இருக்க, இனி. – ஆரி
சரணங்கள்
1. பாவிகளாம் எங்களுக்கு-உமையல்லாது
தாவரமில்லை; நீரே
ஜீவன் தனையுடைய தேவ குமாரனாக
மேவு கிறிஸ்தென்றுமையே-ஆவலுடன் நம்பினோம். – ஆரி
2. போனவர்போல நாங்களும்-உமை நெகிழ்ந்து
போவதில்லை, பரமனே,
ஞானோபதேச குருவான உம்மை அண்டின
ஈனர் இனிதுற்ற உமது-தானமதைப் பிரிந்து. – ஆரி
3. உற்றார் சிநேகர் யாரையும்-எம் வீடுவாசல்
உள்ள பொருளனைத்தையும்
முற்றாய் வெறுத் தும்மையே பற்றியிருக்க நாங்கள்
தெற்றாய், இனியும்மைநன்றி-யற்றோர்போலே நெகிழ்ந்து. – ஆரி
4. பொன் னுலகத் திருந்தெம்மைப்-புரக்க வந்த
புண்ய நாதன் நீரல்லவோ?
பின்ன பேதகமற்ற மன்னவனே, உமது
நன்னய முகப்பிர-சன்ன மதனை விட்டு. – ஆரி
Aarinidathil Yeaguvom- ஆரிடத்தினில் ஏகுவோம் Lyrics in English
Aaridaththinil aekuvom? Pallavi aaridaththil aekuvom?-em aanndavanae, aaridaththil aekuvom? Anupallavi aaridaththil aekuvom? Soraaniththiya jeeva naeraar vasanangal umsaaril irukka, ini. – aari saranangal 1. Paavikalaam engalukku-umaiyallaathu thaavaramillai; neerae jeevan thanaiyutaiya thaeva kumaaranaaka maevu kiristhentumaiyae-aavaludan nampinom. – aari 2. Ponavarpola naangalum-umai nekilnthu povathillai, paramanae, njaanopathaesa kuruvaana ummai anntina eenar inithutta umathu-thaanamathaip pirinthu. – aari 3. Uttaாr sinaekar yaaraiyum-em veeduvaasal ulla porulanaiththaiyum muttaாy veraுth thummaiyae pattiyirukka naangal thettaாy, iniyummainanti-yattaோrpolae nekilnthu. – aari 4. Pon nulakath thirunthemmaip-purakka vantha punnya naathan neerallavo? Pinna paethakamatta mannavanae, umathu nannaya mukappira-sanna mathanai vittu. – aari
PowerPoint Presentation Slides for the song Aarinidathil Yeaguvom- ஆரிடத்தினில் ஏகுவோம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarinidathil Yeaguvom – ஆரிடத்தினில் ஏகுவோம் PPT
Aarinidathil Yeaguvom PPT

