Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aandavar Pangaga Aanaithaiyum - ஆண்டவர் பங்காக அனைத்தையும்-

பல்லவி

ஆண்டவர் பங்காக அனைத்தையும் ,அவர்க்கே ,
அன்பர்களே ,தாரும்; -அதால் வரும்
இன்பந்தனைப் பாரும் .

அனுபல்லவி

வான்பல கணிகளைத் திறந்தாசீர்
வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்
நான் தருவேன் ,பரிசோதியுங்களென்று
ராஜாதிராஜ சம்பூரணர் சொல்வதால்- ஆண்டவர்

சரணங்கள்

1. வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும்
விண்ணவர் கோமானே -அந்த
மேதகத்தை நன்றி ஞாபகம் செய்திட
விதித்தது தானே .
வேதனம் ,வியாபாரம் ,காலி , பறவையில் ,
வேளாண்மை , கைத்தொழில் ,வேறுவழிகளில் ,
ஊதியமாகும் எதிலும் அவர் பாகம்
உத்தமமாக பிரதிஷ்டை பண்ணியே .-ஆண்டவர்

2. ஆலயங் கட்ட, அருச்சனை செய்ய
அருட்பணி பேண, -தேவ
ஊழியரைத் தாங்கி உன்னத போதனை
ஓதும் நன்மை காண ,
ஏழைகள் ,கைம்பெண்கள் ,அனாதப்பாலர்கள்
எதுகரமற்ற ஊனர், பிணியாளர்,
சாலவறிவு நாகரீக மற்றவர்
தக்க துணைபெற்றுத் துக்கமகன்றிட .-ஆண்டவர்

3. நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள்
யாவும் நமக்கீந்து ,-நல்ல
இம்மானுவே லென்றொரு மகனைத் தந்து
இவ்வாறன்பு கூர்ந்து ,
நன்மை புரிந்த பிதாவைக் கனம் பண்ண
நம்மையும் நம்முட யாவைய மீந்தாலும்
சம்மதமே அதிலும் தசம பாகம்
தாவென்று கேட்கிறார் ; மாவிந்தையல்லவோ? -ஆண்டவர்

ஆண்டவர் பங்காக அனைத்தையும்- Aandavar Pangaga Aanaithaiyum Lyrics in English

Pallavi

Aanndavar pangaaka anaiththaiyum ,avarkkae ,
Anparkalae ,thaarum; -athaal varum
Inpanthanaip paarum .

Anupallavi

Vaanpala kannikalaith thiranthaaseer
Vaathangal idangaொllaamar pokumattum
Naan tharuvaen ,parisothiyungalentu
Raajaathiraaja sampooranar solvathaal- aanndavar

Saranangal

1. Vaethaalaraajan arunjirai meettalum
Vinnnavar komaanae -antha
Maethakaththai nanti njaapakam seythida
Vithiththathu thaanae .
Vaethanam ,viyaapaaram ,kaali , paravaiyil ,
Vaelaannmai , kaiththolil ,vaeraுvalikalil ,
Oothiyamaakum ethilum avar paakam
Uththamamaaka pirathishtai pannnniyae .-aanndavar

2. Aalayang katta, aruchchanai seyya
Arutpanni paena, -thaeva
Ooliyaraith thaangi unnatha pothanai
Othum nanmai kaana ,
Aelaikal ,kaimpennkal ,anaathappaalarkal
Ethukaramatta oonar, pinniyaalar,
Saalavarivu naakareeka mattavar
Thakka thunnaipettaுth thukkamakantida .-aanndavar

3. Nammaip pataiththuch sukam pelan selvangal
Yaavum namakgeenthu ,-nalla
Immaanuvae lentaொru makanaith thanthu
Ivvaaranpu koornthu ,
Nanmai purintha pithaavaik kanam pannna
Nammaiyum nammuda yaavaiya meenthaalum
Sammathamae athilum thasama paakam
Thaaventu kaetkiraar ; maavinthaiyallavo? -aanndavar

PowerPoint Presentation Slides for the song ஆண்டவர் பங்காக அனைத்தையும்- Aandavar Pangaga Aanaithaiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aandavar Pangaga Aanaithaiyum – ஆண்டவர் பங்காக அனைத்தையும்- PPT
Aandavar Pangaga Aanaithaiyum PPT

ஆண்டவர் பாகம் நன்மை பல்லவி பங்காக அனைத்தையும் அவர்க்கே அன்பர்களே தாரும் அதால் இன்பந்தனைப் பாரும் அனுபல்லவி வான்பல கணிகளைத் திறந்தாசீர் வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும் தமிழ்