இராகம்: சங்கராபரணம் தாளம்: ஆதி
சரணங்கள்
1. ஆனந்தமே! பரமானந்தமே! – இயேசு
அண்ணலை அண்டினேன் ஆனந்தமே!
ஞான இரட்சகரென் பாவம் மன்னித்ததால்
ஆனேனவருக்குள்ளானந்தமே! – ஆனந்தமே
2. வீணாகக் காலமும் நான் கழித்தேன் – வழி
தோன்றாமல் நின்றுமே நான் விழித்தேன்!
காணாத ஆடெனைக் கண்டு சுமந்த – என்
காதலன் தோள் எனக்கானந்தமே! – ஆனந்தமே
3. நாடியே பாவத்தைத் தேடியே புரிந்து,
நைந்து கரைந்து மனம் மெலிந்து,
வாடியே தவித்த ஏழை என் பாவத்தை
நாடியே மன்னித்தார் நம்பினேனே! – ஆனந்தமே
4. பாவ வலையிலகப்பட்டுழன்ற – என்
பக்கமே வந்து கரந்தூக்கி,
ஜீவ பாதையில் வழி நடத்தி – நிதம்
தேற்றி வருகிறார் ஆனந்தமே – ஆனந்தமே
5. இந்த நன்றியை நான் மறவேன் – எந்தன்
யாவையும் பூசையாய் நான் படைத்தேன்
அந்தம்வரை இயேசு சுவாமிக்குத் தொண்டனாய்
ஆகவே தீர்மானம் ஆனந்தமே! – ஆனந்தமே
Aananthamae Paramananthame Yesu – ஆனந்தமே! பரமானந்தமே! – இயேசு Lyrics in English
Iraakam: sangaraaparanam thaalam: aathi saranangal 1. Aananthamae! Paramaananthamae! – Yesu annnalai anntinaen aananthamae! Njaana iratchakaren paavam manniththathaal aanaenavarukkullaananthamae! – aananthamae 2. Veennaakak kaalamum naan kaliththaen – vali thontamal nintumae naan viliththaen! Kaannaatha aadenaik kanndu sumantha – en kaathalan thol enakkaananthamae! – aananthamae 3. Naatiyae paavaththaith thaetiyae purinthu, nainthu karainthu manam melinthu, vaatiyae thaviththa aelai en paavaththai naatiyae manniththaar nampinaenae! – aananthamae 4. Paava valaiyilakappattulanta – en pakkamae vanthu karanthookki, jeeva paathaiyil vali nadaththi – nitham thaetti varukiraar aananthamae – aananthamae 5. Intha nantiyai naan maravaen – enthan yaavaiyum poosaiyaay naan pataiththaen anthamvarai Yesu suvaamikkuth thonndanaay aakavae theermaanam aananthamae! – aananthamae
PowerPoint Presentation Slides for the song Aananthamae Paramananthame Yesu – ஆனந்தமே! பரமானந்தமே! – இயேசு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aananthamae Paramananthame Yesu – ஆனந்தமே! பரமானந்தமே! இயேசு PPT
Aananthamae Paramananthame Yesu PPT

