பல்லவி
ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – என்
இயேசு மகாராஜா சந்நிதியில்
சரணங்கள்
1. இந்த புவி ஒரு சொந்தம் அல்ல என்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டுத் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
இங்கேயே பங்காய்க் கிடைத்திடினும் – ஆனந்தம்
2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே!
காரணமின்றி கலங்கேனே யான்
விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட
மேவியே சுக்கான் பிடித்திடுமே! – ஆனந்தம்
3. என் உள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?
கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது;
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
ஜெயகீதம் பாடி மகிழ்ந்திடலாம்! – ஆனந்தம்
4. கூடாரவாசிகளாகும் நமக்கிங்கு
வீடென்றும், நாடென்றும் சொல்லலாமோ?
கை வேலையல்லாத வீடொன்றை மேலே நான்
செய்வேன் என்று இயேசு போகலையோ? – ஆனந்தம்
5. துன்பங்கள், தொல்லை, இடுக்கண், இடர், இவை
தொண்டர் எமை அண்டி வந்திடினும்
சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
துன்பத்தினூடே அனுப்பிடுவார்! – ஆனந்தம்
6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்!
ஏழை வெகுவாய் கலங்குறேனே;
என் நேசர் தன்முக ஜோதியே யல்லாமல்
இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை – ஆனந்தம்
Aanantham Undanenukku Undu – ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு Lyrics in English
Pallavi
Aanantha munndenakkaananthamunndu – en
Yesu makaaraajaa sannithiyil
Saranangal
1. Intha puvi oru sontham alla entu
Yesu en naesar molinthanarae
Ikkattuth thunpamum Yesuvin thonndarkku
Ingaeyae pangaayk kitaiththitinum – aanantham
2. Karththaavae neer enthan kaarunnya kottaைyae!
Kaaranaminti kalangaenae yaan
Visvaasap paelaiyil maelokam vanthida
Maeviyae sukkaan pitiththidumae! – aanantham
3. En ullamae unnil sanjalam aen veennaay?
Kannnneerin pallaththaakkallo ithu;
Seeyon nakaraththil seekkiram sentu naam
Jeyageetham paati makilnthidalaam! – aanantham
4. Koodaaravaasikalaakum namakkingu
Veedentum, naadentum sollalaamo?
Kai vaelaiyallaatha veetontai maelae naan
Seyvaen entu Yesu pokalaiyo? – aanantham
5. Thunpangal, thollai, idukkann, idar, ivai
Thonndar emai annti vanthitinum
Solli mutiyaatha aaraுthal kirupaiyai
Thunpaththinootae anuppiduvaar! – aanantham
6. Yesuvae seekkiram iththarai vaarumaen!
Aelai vekuvaay kalanguraேnae;
En naesar thanmuka jothiyae yallaamal
Inpam tharum porul aethumillai – aanantham
PowerPoint Presentation Slides for the song Aanantham Undanenukku Undu – ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aanantham Undanenukku Undu – ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு PPT
Aanantham Undanenukku Undu PPT

