Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaha Enna Inbam - ஆகா என்ன இன்பம்

பல்லவி

ஆகா என்ன இன்பம் பரலோக இன்பம்
இன்ப இயேசு அளித்தனரே
அளவிற்கடங்கா புத்திக்கும் எட்டிடா!
அன்பை கூற நாவும் போதுமோ

சரணங்கள்

1. நீசத்துரோகி எந்தனை – பாசமாய் ஏற்றீரோ நீர்
பாவ உளையினின்றே – தூக்கி எடுத்தீரோ நீர் – ஆகா

2. நாசபுரி நோக்கியே – விரைந்து சென்ற என்னை
பாசம் வைத்தேன் உந்தனில் என்று கூவி அழைத்தீரே நீர் – ஆகா

3. நெரிந்த நாணல் என்னை முறித்திடும் தருணம்
பரிந்து பேசி அன்பால் – நிலையாய் நிறுத்தினீரே – ஆகா

4. எச்சரிப்பின் சத்தத்தை – தள்ளி விட்டபோதிலும்
அன்பின் சவுக்கடியால் – சேர்த்தன்பாய் ஆதரித்தீர் – ஆகா

5. காரிருள் சூழும் வேளை – கலங்கித் தவிக்கையில்
காத்து நீர் என்னைத் தேற்றிக் – கருத்தாய் ஆதரித்தீர் – ஆகா

6. பிராணநாதா உந்தனை என்று நான் கண்டிடுவேன்
ஆருயிர் நேசா உம்மை காண ஆசை பொங்குதே – ஆகா

7. அழைப்பின் சத்தம் கேட்க – நாட்கள் அதிகமாமோ
நேசர் மார்ப்பில் சாய்திட – வாஞ்சை பெருகிடுதே – ஆகா

8. ஆகாய மேகந்தனில் சேர்ந்திடும் நேரந்தனில்
ஆனந்தம் ஆனந்தமே – என்றென்றும் ஆனந்தமே – ஆகா

ஆகா என்ன இன்பம் – Aaha Enna Inbam Lyrics in English

Pallavi

Aakaa enna inpam paraloka inpam
Inpa Yesu aliththanarae
Alavirkadangaa puththikkum ettidaa!
Anpai koora naavum pothumo

Saranangal

1. Neesaththuroki enthanai – paasamaay aettaீro neer
Paava ulaiyininte – thookki eduththeero neer – aakaa

2. Naasapuri Nnokkiyae – virainthu senta ennai
Paasam vaiththaen unthanil entu koovi alaiththeerae neer – aakaa

3. Nerintha naanal ennai muriththidum tharunam
Parinthu paesi anpaal – nilaiyaay niraுththineerae – aakaa

4. Echcharippin saththaththai – thalli vittapothilum
Anpin savukkatiyaal – serththanpaay aathariththeer – aakaa

5. Kaarirul soolum vaelai – kalangith thavikkaiyil
Kaaththu neer ennaith thaettik – karuththaay aathariththeer – aakaa

6. Piraananaathaa unthanai entu naan kanndiduvaen
Aaruyir naesaa ummai kaana aasai ponguthae – aakaa

7. Alaippin saththam kaetka – naatkal athikamaamo
Naesar maarppil saaythida – vaanjai perukiduthae – aakaa

8. Aakaaya maekanthanil sernthidum naeranthanil
Aanantham aananthamae – ententum aananthamae – aakaa

PowerPoint Presentation Slides for the song ஆகா என்ன இன்பம் – Aaha Enna Inbam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaha Enna Inbam – ஆகா என்ன இன்பம் PPT
Aaha Enna Inbam PPT

ஆகா நீர் இன்பம் என்னை ஆதரித்தீர் ஆனந்தமே பல்லவி பரலோக இன்ப இயேசு அளித்தனரே அளவிற்கடங்கா புத்திக்கும் எட்டிடா அன்பை கூற நாவும் போதுமோ சரணங்கள் தமிழ்