Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aa Yesuvae - ஆ இயேசுவே உம்மாலே

1. ஆ இயேசுவே, உம்மாலே

நான் மீட்கப்பட்டவன்;

உம் திவ்விய ரத்தத்தாலே

நான் சுத்தமானவன்;

மிகுந்த கஸ்தியாலே

என் தோஷத்தைத் தீர்த்தீர்;

உமது சாவினாலே

நீர் என்னை ரட்சித்தீர்.

2. நான் உம்மால் என்றும் வாழ,

இப்பந்தியில் நீரே

என் ஆவிக் கேற்றதான

அமிர்தம் தந்தீரே;

உம் ஆசீர்வாதம் ஈந்து,

என் பாவம் மன்னியும்;

அன்போடு என்னைச் சேர்த்து,

தயாளம் காண்பியும்.

3. நீர் இன்னும் என்னில் காணும்

பொல்லாங்கு யாவையும்

அகற்றிப்போட வாரும்,

என் நெஞ்சில் தங்கிடும்;

நான் உம்மைப் பற்றிக் கொள்ள

கருணை புரியும்;

மிகுந்த தாழ்மையுள்ள

சித்தம் கடாஷியும்.

4. நல் மீட்பரே, உம்மோடு

நான் ஐக்கியமாகவும்,

நாடோறும் வாஞ்சையோடு

உம்மில் நிலைக்கவும்,

மிகுந்த அன்பினாலே

துணை செய்தருளும்;

தெய்வீக அப்பத்தாலே

நீர் என்னைப் போஷியும்.

Aa Yesuvae, Ummaalae Lyrics in English

1. Aa Yesuvae, ummaalae naan meetkappattavan; um thivviya raththaththaalae naan suththamaanavan; mikuntha kasthiyaalae en thoshaththaith theerththeer; umathu saavinaalae neer ennai ratchiththeer. 2. Naan ummaal entum vaala, ippanthiyil neerae en aavik kaettathaana amirtham thantheerae; um aaseervaatham eenthu, en paavam manniyum; anpodu ennaich serththu, thayaalam kaannpiyum. 3. Neer innum ennil kaanum pollaangu yaavaiyum akattippoda vaarum, en nenjil thangidum; naan ummaip pattik kolla karunnai puriyum; mikuntha thaalmaiyulla siththam kadaashiyum. 4. Nal meetparae, ummodu naan aikkiyamaakavum, naatooraுm vaanjaiyodu ummil nilaikkavum, mikuntha anpinaalae thunnai seytharulum; theyveeka appaththaalae neer ennaip poshiyum.

PowerPoint Presentation Slides for the song Aa Yesuvae, Ummaalae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aa Yesuvae – ஆ இயேசுவே உம்மாலே PPT
Aa Yesuvae PPT

மிகுந்த நீர் உம் இயேசுவே உம்மாலே மீட்கப்பட்டவன் திவ்விய ரத்தத்தாலே சுத்தமானவன் கஸ்தியாலே தோஷத்தைத் தீர்த்தீர் உமது சாவினாலே என்னை ரட்சித்தீர் உம்மால் தமிழ்