1.ஆ இயேசுவே, நீர்
என் பலியானீர்;
பாவி உம்மை அகற்ற,
கல்வாரி சென்றீர்;
மன்றாடிடுவீர்
இப்பாவிக்காய் நீர்;
என்னைக் கொன்றோருக்காய்
உயிர் ஈந்தேன் என்பீர்.
2.இறங்கிடுமேன்,
அகற்றிடுமேன்
உந்தன் அன்பினால்
என்தன் உட்கடினத்தை;
சிலுவை அன்பால்
என்னை இழுத்தால்
ஆவேன் விடுதலை பாவியாம்
அடிமை.
3.கோபம் பெருமை
போக்கும் சிலுவை;
அகற்றுமே தூய ரத்தமும்
தோஷத்தை;
தீய மனத்தை
பாவ பாரத்தை
அகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும்
உம்மண்டை.
4.தூய வெண்மையே
இப்போ இப்போதே;
உந்தன் ரத்தத்தால்
தூய்மையாவேன் பாவியே;
தூயோன் ஆக்குவீர்
முற்றும் மாற்றுவீர்;
உந்தன் சாயல் என் வாழ்க்கையில்
உண்டாக்குமே.
5.உம் ரத்தம் என்னில்
நிலைத்திருப்பின்,
ஒழிந்திடும் எப்பாவம் பலவீனமும்
பிதாவின் முன்னர்
சகாயராம் நீர்,
சுதா, பாவியேனை உம் அன்பால்
வாழ்விப்பீர்.
Aa Yesuvae Neer – ஆ இயேசுவே நீர் Lyrics in English
1.aa Yesuvae, neer
En paliyaaneer;
Paavi ummai akatta,
Kalvaari senteer;
Mantadiduveer
Ippaavikkaay neer;
Ennaik kontorukkaay
Uyir eenthaen enpeer.
2.irangidumaen,
Akattidumaen
Unthan anpinaal
Enthan utkatinaththai;
Siluvai anpaal
Ennai iluththaal
Aavaen viduthalai paaviyaam
Atimai.
3.kopam perumai
Pokkum siluvai;
Akattaுmae thooya raththamum
Thoshaththai;
Theeya manaththai
Paava paaraththai
Akatti, raththaththaal serththidum
Ummanntai.
4.thooya vennmaiyae
Ippo ippothae;
Unthan raththaththaal
Thooymaiyaavaen paaviyae;
Thooyon aakkuveer
Muttaுm maattaுveer;
Unthan saayal en vaalkkaiyil
Unndaakkumae.
5.um raththam ennil
Nilaiththiruppin,
Olinthidum eppaavam palaveenamum
Pithaavin munnar
Sakaayaraam neer,
Suthaa, paaviyaenai um anpaal
Vaalvippeer.
PowerPoint Presentation Slides for the song Aa Yesuvae Neer – ஆ இயேசுவே நீர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aa Yesuvae Neer – ஆ இயேசுவே நீர் PPT
Aa Yesuvae Neer PPT

