எங்கே புறப்பட்டுப்போனோம் என்று இவர்களைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.
என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதுக்கும் உள்ளானவனாயிருக்கும்படி என்னை நீ பெற்றாயே; ஐயோ! நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.
நீ அறியாத தேசத்தில் உன் சத்துருக்கள் வசமாக நான் உன்னைத் தாண்டிப்போகப் பண்ணுவேன்; உங்கள்மேல் எரியப்போகிற அக்கினி என் கோபத்திலே மூண்டது என்று கர்த்தர் சொன்னார்.
உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.
இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்குமுன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.
உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
not I | לֹֽא | lōʾ | loh |
sat | יָשַׁ֥בְתִּי | yāšabtî | ya-SHAHV-tee |
in the assembly | בְסוֹד | bĕsôd | veh-SODE |
mockers, the of | מְשַׂחֲקִ֖ים | mĕśaḥăqîm | meh-sa-huh-KEEM |
nor rejoiced; | וָֽאֶעְלֹ֑ז | wāʾeʿlōz | va-eh-LOZE |
because hand: | מִפְּנֵ֤י | mippĕnê | mee-peh-NAY |
thy | יָֽדְךָ֙ | yādĕkā | ya-deh-HA |
of | בָּדָ֣ד | bādād | ba-DAHD |
alone sat I | יָשַׁ֔בְתִּי | yāšabtî | ya-SHAHV-tee |
for | כִּֽי | kî | kee |
me with indignation. | זַ֖עַם | zaʿam | ZA-am |
thou hast filled | מִלֵּאתָֽנִי׃ | millēʾtānî | mee-lay-TA-nee |