இதோ, இருள் பூமியையும், காரிருள் வானங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாக திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.
தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களோடேகூட அவர்கள் பொன்னையும் அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய கர்த்தரின் நாமத்துக்கென்றும் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும் தூரத்திலிருந்து கொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கனவே எனக்குக் காத்திருக்கும்.
இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும் உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.
இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
| For | כִּֽי | kî | kee |
| the nation | הַגּ֧וֹי | haggôy | HA-ɡoy |
| and kingdom | וְהַמַּמְלָכָ֛ה | wĕhammamlākâ | veh-ha-mahm-la-HA |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| will not | לֹא | lōʾ | loh |
| serve | יַעַבְד֖וּךְ | yaʿabdûk | ya-av-DOOK |
| thee shall perish; | יֹאבֵ֑דוּ | yōʾbēdû | yoh-VAY-doo |
| yea, those nations | וְהַגּוֹיִ֖ם | wĕhaggôyim | veh-ha-ɡoh-YEEM |
| shall be utterly | חָרֹ֥ב | ḥārōb | ha-ROVE |
| wasted. | יֶחֱרָֽבוּ׃ | yeḥĕrābû | yeh-hay-ra-VOO |