அப்பொழுது அசீரியா ராஜா லாகீலிருந்து ரப்சாக்கேயைப் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவன் வந்து வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்றான்.
நீ என்னிடத்தில்: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்வாயாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும், எருசலேமையும் நோக்கி: இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.
நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.
அதற்கு ரப்சாக்கே உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும், தங்கள் நீரைக் குடிக்கவும், அலங்கத்திலே தங்கியிருக்கிற புருஷரண்டக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும், உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப்பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,
ரப்சாக்கே நின்றுகொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்.
கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார், இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.
ஆமாத் அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயீமின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?
கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு அந்தத்தேசங்களுடைய எல்லாத் தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.
Beware lest | פֶּן | pen | pen |
persuade | יַסִּ֨ית | yassît | ya-SEET |
אֶתְכֶ֤ם | ʾetkem | et-HEM | |
Hezekiah you, | חִזְקִיָּ֙הוּ֙ | ḥizqiyyāhû | heez-kee-YA-HOO |
saying, The | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
Lord deliver | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
will delivered of | יַצִּילֵ֑נוּ | yaṣṣîlēnû | ya-tsee-LAY-noo |
the gods nations | הַהִצִּ֜ילוּ | hahiṣṣîlû | ha-hee-TSEE-loo |
the of any | אֱלֹהֵ֤י | ʾĕlōhê | ay-loh-HAY |
Hath | הַגּוֹיִם֙ | haggôyim | ha-ɡoh-YEEM |
us. | אִ֣ישׁ | ʾîš | eesh |
his land | אֶת | ʾet | et |
hand the of out | אַרְצ֔וֹ | ʾarṣô | ar-TSOH |
of the king | מִיַּ֖ד | miyyad | mee-YAHD |
of Assyria? | מֶ֥לֶךְ | melek | MEH-lek |
אַשּֽׁוּר׃ | ʾaššûr | ah-shoor |