அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நியஸ்திரீகளைச் சேர்த்துகொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.
அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான்.
அப்படியே யூதா பென்யமீன் புத்திரத்தார் எல்லாரும் மூன்றுநாளைக்குள் எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
ஆசகேலின் குமாரன் யோனத்தானும், திக்காவின் குமாரன் யக்சியாவுமாத்திரம் அதை விசாரிக்கும்படிக்கு வைக்கப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.
அந்நியஜாதியான ஸ்திரீகளைக்கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல்தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.
ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டர்கள் யாரென்றால்: யோதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா எலியேசர், யாரீப்கெதலியா என்பவர்கள்.
இவர்கள் எங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக்கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.
இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள், இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.
stood up, | וַיָּ֨קָם | wayyāqom | va-YA-kome |
And Ezra | עֶזְרָ֤א | ʿezrāʾ | ez-RA |
the priest | הַכֹּהֵן֙ | hakkōhēn | ha-koh-HANE |
said and | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
unto | אֲלֵהֶ֔ם | ʾălēhem | uh-lay-HEM |
them, Ye | אַתֶּ֣ם | ʾattem | ah-TEM |
transgressed, have | מְעַלְתֶּ֔ם | mĕʿaltem | meh-al-TEM |
and have taken | וַתֹּשִׁ֖יבוּ | wattōšîbû | va-toh-SHEE-voo |
wives, | נָשִׁ֣ים | nāšîm | na-SHEEM |
strange | נָכְרִיּ֑וֹת | nokriyyôt | noke-REE-yote |
increase to | לְהוֹסִ֖יף | lĕhôsîp | leh-hoh-SEEF |
עַל | ʿal | al | |
the trespass | אַשְׁמַ֥ת | ʾašmat | ash-MAHT |
of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |