பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்.
மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது.
பின்பு Šεர் என்னை நோΕ்கி: மனுபுத்திரனே, நீ போய், இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் சேர்ந்து, என் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசு..
விளங்காத பேச்சும், கடினமான பாஷையுமுள்ள ஜனத்தண்டைக்கல்ல, இஸ்ரவேல் சந்ததியாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய்.
விளங்காத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான பாஷையுமுள்ள அநேகமான ஜனங்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்களோ?
நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.
அப்பொழுது ஆவி, என்னை உயர எடுத்துக்கொண்டது; கர்த்தருடைய ஸ்தானத்திலிருந்து விளங்கிய அவருடைய மகிமைக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று எனக்குப் பின்னாக கூப்பிட்ட மகா சத்தத்தின் இரைச்சலைக் கேட்டேன்.
ஒன்றொடொன்று இணைந்திருக்கிற ஜீவன்களுடைய செட்டைகளின் இரைச்சலையும், அதற்கெதிரே ஓடிய சக்கரங்களின் இரைச்சலையும், மகா சத்தத்தின் இரைச்சலையும் கேட்டேன்
கேபார் நதியண்டையிலே தெலாபீபிலே தாபரிக்கிற சிறைப்பட்டவர்களிடத்துக்கு நான் வந்து, அவர்கள் தாபரிக்கிற ஸ்தலத்திலே தாபரித்து, ஏழுநாள் அவர்கள் நடுவிலே பிரமித்தவனாய்த் தங்கினேன்.
அவ்விடத்திலே கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடனே பேசுவேன் என்றார்.
உடனே ஆவி எனக்குள்ளே புகுந்து, என்னைக் காலுூன்றி நிற்கும்படி செய்தது, அப்பொழுது அவர் என்னுடனே பேசி; நீ போய், உன் வீட்டுக்குள்ளே உன்னை அடைத்துக்கொண்டிரு.
நான் உன் நாவை உன் மேல் வாயோடே ஒட்டிக்கொள்ளப்பண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்துகொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலகவீட்டார்.
Then I arose, | וָאָקוּם֮ | wāʾāqûm | va-ah-KOOM |
and went forth | וָאֵצֵ֣א | wāʾēṣēʾ | va-ay-TSAY |
into | אֶל | ʾel | el |
the plain: | הַבִּקְעָה֒ | habbiqʿāh | ha-beek-AH |
and, behold, | וְהִנֵּה | wĕhinnē | veh-hee-NAY |
there, glory | שָׁ֤ם | šām | shahm |
the the Lord | כְּבוֹד | kĕbôd | keh-VODE |
of | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
stood | עֹמֵ֔ד | ʿōmēd | oh-MADE |
as the glory | כַּכָּב֕וֹד | kakkābôd | ka-ka-VODE |
which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
saw I | רָאִ֖יתִי | rāʾîtî | ra-EE-tee |
by | עַל | ʿal | al |
the river | נְהַר | nĕhar | neh-HAHR |
of Chebar: | כְּבָ֑ר | kĕbār | keh-VAHR |
fell I and | וָאֶפֹּ֖ל | wāʾeppōl | va-eh-POLE |
on | עַל | ʿal | al |
my face. | פָּנָֽי׃ | pānāy | pa-NAI |