அது வலைகளை விரிக்கிற இடமாகச் சமுத்திரத்தின் நடுவிலே இருக்கும்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; அது ஜாதிகளுக்குக் கொள்ளையாகும்.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் கூட்டத்தாரோடும் திரளான ஜனத்தோடும் தீருவுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.
உன் பாட்டுகளின் சத்தத்தை ஓயப்பண்ணுவேன்; உன் சுரமண்டலங்களின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை.
தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன் நடுவில் சங்காரம் நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னைக் குடியில்லாத, நகரங்களைப்போலப் பாழான நகரமாக்கும்போதும், மிகுந்த தண்ணீர்கள் உன்னை மூடத்தக்கதாய் நான் உன்மேல் சமுத்திரத்தை வரப்பண்ணும்போதும்,
உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.
| it, a place And | וּנְתַתִּ֞יךְ | ûnĕtattîk | oo-neh-ta-TEEK |
| make will I thee | לִצְחִ֣יחַ | liṣḥîaḥ | leets-HEE-ak |
| the top like | סֶ֗לַע | selaʿ | SEH-la |
| rock: a of | מִשְׁטַ֤ח | mišṭaḥ | meesh-TAHK |
| spread to nets be | חֲרָמִים֙ | ḥărāmîm | huh-ra-MEEM |
| thou | תִּֽהְיֶ֔ה | tihĕye | tee-heh-YEH |
| shalt no upon; thou shalt | לֹ֥א | lōʾ | loh |
| built | תִבָּנֶ֖ה | tibbāne | tee-ba-NEH |
| be | ע֑וֹד | ʿôd | ode |
| more: | כִּ֣י | kî | kee |
| for | אֲנִ֤י | ʾănî | uh-NEE |
| I God. | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| have spoken | דִּבַּ֔רְתִּי | dibbartî | dee-BAHR-tee |
| saith the | נְאֻ֖ם | nĕʾum | neh-OOM |
| Lord the | אֲדֹנָ֥י | ʾădōnāy | uh-doh-NAI |
| Lord | יְהוִֽה׃ | yĕhwi | yeh-VEE |