தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது.
அந்தப் பீடத்தின் சகல பணிமுட்டுகளாகிய சாம்பல் எடுக்கத்தக்க சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பனிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தினால் பண்ணினான்.
அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளை வெண்கலத் தகட்டால் மூடி,
பலிபீடத்தை அவைகளால் சுமக்கத்தக்கதாக, அதின் பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சினான்; பலிபீடத்தை உள்வெளிவிட்டுப் பலகைகளினால் செய்தான்.
பிராகார வாசலின் தொங்குதிரை இளநீல நூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்ட விசித்திரத்தையல் வேலையாயிருந்தது; அதின் நீளம் இருபது முழம், அதின் அகலமும் உயரமும் பிராகாரத்தின் தொங்குதிரைகளுக்குச் சரியாய் ஐந்து முழம்.
யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் கர்த்தர் மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான்.
அதினாலே ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் சகல பணிமுட்டுகளையும்,
சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், வாசஸ்தலத்தின் சகல முளைகளையும், சுற்றுப்பிராகாரத்தின் சகல முளைகளையும் பண்ணினான்.
| And he made | וַיַּ֖עַשׂ | wayyaʿaś | va-YA-as |
| אֶת | ʾet | et | |
| the court: | הֶֽחָצֵ֑ר | heḥāṣēr | heh-ha-TSARE |
| on the south | לִפְאַ֣ת׀ | lipʾat | leef-AT |
| side | נֶ֣גֶב | negeb | NEH-ɡev |
| southward | תֵּימָ֗נָה | têmānâ | tay-MA-na |
| the hangings | קַלְעֵ֤י | qalʿê | kahl-A |
| of the court | הֶֽחָצֵר֙ | heḥāṣēr | heh-ha-TSARE |
| were of fine twined | שֵׁ֣שׁ | šēš | shaysh |
| linen, | מָשְׁזָ֔ר | mošzār | mohsh-ZAHR |
| an hundred | מֵאָ֖ה | mēʾâ | may-AH |
| cubits: | בָּֽאַמָּֽה׃ | bāʾammâ | BA-ah-MA |