ஆகையால், உன் தேவனாகிய கர்த்தரின் வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்.
அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம்.
ஆகையால், நீ புசித்துத் திர்ப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய்.
உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும்,
உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.
உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்து கொள்வாயானால், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன்.
| For | כִּ֚י | kî | kee |
| the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| thy God | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| bringeth | מְבִֽיאֲךָ֖ | mĕbîʾăkā | meh-vee-uh-HA |
| thee into | אֶל | ʾel | el |
| a good | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| land, | טוֹבָ֑ה | ṭôbâ | toh-VA |
| a land | אֶ֚רֶץ | ʾereṣ | EH-rets |
| of brooks | נַ֣חֲלֵי | naḥălê | NA-huh-lay |
| of water, | מָ֔יִם | māyim | MA-yeem |
| of fountains | עֲיָנֹת֙ | ʿăyānōt | uh-ya-NOTE |
| and depths | וּתְהֹמֹ֔ת | ûtĕhōmōt | oo-teh-hoh-MOTE |
| that spring out | יֹֽצְאִ֥ים | yōṣĕʾîm | yoh-tseh-EEM |
| of valleys | בַּבִּקְעָ֖ה | babbiqʿâ | ba-beek-AH |
| and hills; | וּבָהָֽר׃ | ûbāhār | oo-va-HAHR |