தண்டு வலிச்சு தண்டு
வலிச்சு படகிலே – என்னை
அண்டி மோதும் துன்பத்துக்கு பயமில்லை
அலைமோதும் கடலில படகில்
என் ஆண்டவர்
இருக்கையிலே பயமில்லை
ஏலேலா -2
கார்மேகம் கருக்குது கடல் அலையும் சீறுது
காற்றுக்கு பயந்து மீன்கள் ஓடுது
துன்பங்கள் தாக்குது மிரட்டி
மிரட்டிப் பார்க்குது – இனி
திகையாதே கலங்காதே என்ற
இயேசு குரல் கேட்குது
– ஏலேலோ
கடலின் ஆழங்கள் கடும்
பேய்களின் ஓலங்கள்
உடலை மெய்சிலிர்க்கச் செய்யுது
சாத்தானின் தந்திரங்கள்
சதிநாச மோசங்கள்
திகையாதே கலங்காதே என்ற
இயேசு குரல் கேட்குது
– ஏலேலோ
வாழ்க்கை என்னும் பயணத்திலே
வெற்றியோ தோல்வியோ
எதிர்நீச்சலடித்து பயணம் செய்குவேன்
சிறுகின்ற புயலிலும்
மோதுகின்ற அலையிலும் – நான்
அக்கரை சேருவேன் என்
இயேசுவோடு மகிழுவேன்
– ஏலேலோ
Thanndu Valichchu Thanndu Chords for Keyboard, Guitar and Piano