🏠  Lyrics  Chords  Bible 

Peththalaiyil Piranthavarai in B♭ Scale

B♭ = A♯

பெத்தலையில் பிறந்தவரை
போற்றித்துதி மனமே – இன்னும்
பெத்தலையில் பிறந்தவரை
போற்றித்துதி மனமே
சருவத்தையும் படைத்தாண்ட
சருவ வல்லவர் – இங்கு தாழ்மையுள்ள
தாய் மடியில் தலை சாய்க்கலானார்
குளிரும் பனியும் கொட்டிலிலே
கோமகனோ தொட்டிலிலே
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்கு தூங்கு பாலா நீ (2)
சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார்
இங்கு பங்கமுற்ற பசுத்தொட்டிலில்
படுத்திருக்கிறார்
முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக
இங்கு மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள
முன்னணையிலே
ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தம்
கொண்டோர்-இங்கு ஆட்களுடைய
சத்தத்துக்குள் அழுது பிறந்தார்
இந்தளவாய் அன்பு வைத்த
எம்பெருமானை – நாம் எண்ணமுடன்
போய் துதிக்க ஏகிடுவோமே


Peththalaiyil Piranthavarai Chords for Keyboard, Guitar and Piano

Peththalaiyil Piranthavarai Chords in B♭ Scale

தமிழ்