🏠  Lyrics  Chords  Bible 

Payappadaathae Payappadaathae in G Scale

பயப்படாதே பயப்படாதே
கர்த்தர் நம்முடனே
கலங்கிடாதே கலங்கிடாதே
மீட்பர் நம்முடனே
வெற்றியுண்டு தோல்வி இல்லை (2)
கர்த்டர் நம்முடனே மீட்பர் நம்முடனே (2)
– பயப்படாதே
வனாந்திர பாதையிலே ஆகார்
அழுகுரல் கேட்டாரே (2)
நீர் என்னைக் காண்கிற தேவன் என்று
பெயரிட்டு மகிழ்ந்தாளே (2)
– வெற்றி
உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும் (2)
யாக்கோபுக் கெதிரே மந்திரம் இல்லை
இஸ்ரவேலுக்கெதிரே குறிசொல்லுவதில்லை (2)
– வெற்றி
அவர் உங்களை விசாரிக்க
பாரத்தை வைத்து விடு(2)
நீதிமானை அவர் தள்ளுவதில்லை
காக்கும் தேவன் அவர் தூங்குவதில்லை (2)
– வெற்றி


Payappadaathae Payappadaathae Chords for Keyboard, Guitar and Piano

Payappadaathae Payappadaathae Chords in G Scale

தமிழ்