🏠  Lyrics  Chords  Bible 

Aanantha Kalippulla Uthadukalaal in D♭ Scale

D♭ = C♯

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றிப் புகழ்கின்றேன்-2
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகின்றேன்-2
தினமும் துதிக்கின்றேன்- ஆனந்த
மேலானது உம் பேரன்பு
உயிரினும் மேலானது-2
உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம்
உயிருள்ள நாளெல்லாம்

  • ஆனந்த

தேவனே நீர் என் தேவன்
தேடுவேன் ஆர்வமுடன்-2
மகிமை வாஞ்சிக்கின்றேன்
உம் வல்லமை காண்கின்றேன்-2
வல்லமை காண்கின்றேன்

  • ஆனந்த

நீர்தானே என் துணையானீர்
உம் நிழலில் களிகூறுவேன்-2
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம் வலக்கரம் தாங்குதையா-2
வலக்கரம் தாங்குதையா

  • ஆனந்த

கைகளை நான் உயர்த்துகிறேன்
உம் திருநாமம் சொல்லி சொல்லி-என்
படுக்கையிலும் நினைக்கின்றேன்
இரவினிலும் தியானிக்கின்றேன்
இரவினிலும் துதிக்கின்றேன்

  • ஆனந்த


Aanantha Kalippulla Uthadukalaal Chords for Keyboard, Guitar and Piano

Aanantha Kalippulla Uthadukalaal Chords in D♭ Scale

தமிழ்