🏠  Lyrics  Chords  Bible 

Theyvanpin Vellamae Thiruvarul Chords

தெய்வன்பின் வெள்ளமே
திருவருள் தோற்றமே
மெய்ம் மனதானந்தமே
செய்ய நின்செம்பாதம் சேவிக்க
இவ்வேளை
அய்யா நின் அடி பணிந்தேன்
மூர்க்கக்குணம் கோபம்
லோகம் சிற்றின்பமும்
மோக ஏக்கமானதைத்
தாக்கியான் தடுமாறித்
தயங்கிடும் வேளையில்
தற்பரா தற்காத்தருள்வாய்
…தெய்வன்பின்
சொந்தம் உனதல்லால்
சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்
புந்திக்கமலமாம் பமாலை கோர்த்து நின்
பொற்பதம் பிடித்துக்கொள்வேன்
…தெய்வன்பின்
பாவச்சேற்றில் பலவேளை பல மின்றப்
பாதையைத் தவறிடினும்
கூவி விளித்தும் தம்
மார்போடணைத்தன்பாய்
கோது பொருத்த நாதா
…தெய்வன்பின்


Theyvanpin Vellamae Thiruvarul Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்