குதூகலம் நிறைந்த நன்னாள்
நடுவானில் மின்னிடுமே
இதுவரை இருந்த துன்பமில்லை
இனி என்றுமே ஆனந்தம்
தளகர்த்தனாம் இயேசு நின்று
யுத்தம் செய்திடுவார் நன்று
அவர் ஆவியினால் புது பெலனடைந்து
ஜெய கீதங்கள் பாடிடுவோம்
புவி மீதினில் சரீர மீட்பு
என்று காண்போம் என ஏங்கும்
மனம் மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
மணவாட்டியைச் சேர்த்திடவே
-குதூகலம்
ஜெப விழிப்புடன் வஞ்சையாக
அவர் வருகஇயை எதிர்நோக்கி
நவ எருசலேமாய் தூய நகரமதாய்
நாம் ஆயத்தமாகிடுவோம்
-குதூகலம்
ஜீவ ஒளி வீசும் கற்களாக
சீயோன் நகர் தனிலே சேர்க்க
அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்
அவர் மகிமையில்ஆர்ப்பரிப்போம்
-குதூகலம்
தேவ தூதர்கள் கானமுடன்
ஆரவார தொனி கேட்கும்
அவர் கிருபையினால் மறு ரூபமாக
நம்மை இனிதுடன் சேர்த்திடுவார்
-குதூகலம்
Kuthookalam Niraintha Nannaal Chords for Keyboard, Guitar and Piano