🏠  Lyrics  Chords  Bible 

Aaththumamae En Mulu Ullamae Chords

ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் ஆண்டவரைத் தொழு தேற்று
இந்நாள் வரை அன்பு வைத்தாதரித்த
உன் ஆண்டவரைத் தொழு தேற்று
போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள
போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள
–ஆத்துமமே
தலைமுறை தலைமுறை தாங்கும் விநோ
உலக முந்தோன்றி ஒழியாத
தலைமுறை தலைமுறை தாங்கும் விநோ
உலக முந்தோன்றி ஒழியா
–ஆத்துமமே
தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும் மேலான
தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும் மேலான
–ஆத்துமமே
வாதை நோய் துன்பம் மாற்றி அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த
வாதை நோய் துன்பம் மாற்றி அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த
–ஆத்துமமே
உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்
உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்
–ஆத்துமமே
துதி மிகுந்தேற ஸ்தோத்திரி தினமே
இதயமே உள்ளமே என் மனமே
துதி மிகுந்தேற ஸ்தோத்திரி தினமே
இதயமே உள்ளமே என் மனமே
–ஆத்துமமே


Aaththumamae En Mulu Ullamae Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்