பல்லவி
அன்பிலே பூரணரே – எங்கள்
ஆனந்த ரூபா அதிசய ராஜா
அனுபல்லவி
அழகில் சிறந்தோனே – எங்கள்
ஆசையின் கோமானே
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அந்நியராம் ஏமை அழைத்தணைத்தீரே – அன்பிலே
சரணங்கள்
1. காத்தீரே கருணையுடன் – எம்
கலக்கங்கள் நீக்கிக் கனிவுடன் தூக்கிக்
கதியில்லா ஏழைகளின் – பெரும்
கவலைகளைப் போக்கி
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
ஆறுதலளித்தீர் அனுதினம் துதிப்பேன் – அன்பிலே
2. ஆனந்தம் ஆனந்தமே உம்
ஆருயிர் ஈந்திர் அவனியில் வந்தீர்
அலகைதனை வென்றீர் அவன்
அடிமைகளை மீட்டீர்
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடுவோம் – அன்பிலே
3. கோடையில் குளிர்தருவே – கடும்
வாடையின் மறைவே ஏழையின் உறவே
கூடுவோம் திருப்பாதம் – தினம்
பாடுவோரும் அவர் கீதம்
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அன்பே, இன்பமே, அன்னையின் மேலாய் – அன்பிலே
4. நித்திய பரிசுத்தரே – உம்
வருகையில் அடியாரைப் பரிசுத்ம் செய்யும்
உத்தம ஜீவிகளாய் நல்
நித்திய வாழ்வினிலே
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அல்லேலூயா கீதம் பாடி மகிழ்வோம் – அன்பிலே
5. தோத்திரம் துதியுமக்கே – தேவ
அன்பின் ஆழம் அறிந்து புகழ்வோம்
ஆயத்தமுள்ளோர்க்கே நீர்
அருணோதயமாவீர்
ஆ! ஆனந்தம் ஆ! ஆனந்தம்
அல்லேலூயா பாடி அகமகிழ்ந்திடுவோம் – அன்பிலே
அன்பிலே பூரணரே – Anbilae Pooranarae Lyrics in English
pallavi
anpilae pooranarae – engal
aanantha roopaa athisaya raajaa
anupallavi
alakil siranthonae – engal
aasaiyin komaanae
aa! aanantham aa! aanantham
anniyaraam aemai alaiththannaiththeerae – anpilae
saranangal
1. kaaththeerae karunnaiyudan – em
kalakkangal neekkik kanivudan thookkik
kathiyillaa aelaikalin – perum
kavalaikalaip pokki
aa! aanantham aa! aanantham
aaruthalaliththeer anuthinam thuthippaen – anpilae
2. aanantham aananthamae um
aaruyir eenthir avaniyil vantheer
alakaithanai venteer avan
atimaikalai meettir
aa! aanantham aa! aanantham
allaelooyaa paati akamakilnthiduvom – anpilae
3. kotaiyil kulirtharuvae – kadum
vaataiyin maraivae aelaiyin uravae
kooduvom thiruppaatham – thinam
paaduvorum avar geetham
aa! aanantham aa! aanantham
anpae, inpamae, annaiyin maelaay – anpilae
4. niththiya parisuththarae – um
varukaiyil atiyaaraip parisuthm seyyum
uththama jeevikalaay nal
niththiya vaalvinilae
aa! aanantham aa! aanantham
allaelooyaa geetham paati makilvom – anpilae
5. thoththiram thuthiyumakkae – thaeva
anpin aalam arinthu pukalvom
aayaththamullorkkae neer
arunnothayamaaveer
aa! aanantham aa! aanantham
allaelooyaa paati akamakilnthiduvom – anpilae
PowerPoint Presentation Slides for the song அன்பிலே பூரணரே – Anbilae Pooranarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbilae Pooranarae – அன்பிலே பூரணரே PPT
Anbilae Pooranarae PPT

