இயேசுவை எடுத்து இயம்புவோம்
1. காலம் கடந்திடும் முன்னர் கருத்துக் கொள்வார் வாருமே
ஞாலத்தில் இயேசுவின் நாமம் எடுத்துச் செல்லச் சேருமே
சுத்தக்கரத்தை உயர்த்தி பரிசுத்தர் யாரும் சேருமே
பாவத்தில் சாகும் ஜனத்தை தடுத்து நிறுத்தக் கூடுமே .. இன்றே
காலம் கடந்திடும் முன்னர் கருத்துக்கொள்வார் வாருமே
ஞாலத்தில் இயேசுவின் நாமம் எடுத்துச் செல்லச் சேருமே
2. தன் கடன் செய்யா மனிதர் கவலையில் வாடி நிற்பார்
தீபத்தில் எண்ணெய் பெறாதோர் துக்கத்தில் மூழ்கிடுவார்
ஆத்தும ஆதாயம் செய்யார் சிரசினில் அடித்துக்கொள்வார்
மாயமாலம் புரிந்தோர்க்கு செம்மையாய்ப் பதில் கொடுப்பார் .. இன்றே
3. சீஷர்கள் யாவரும் ஒன்றாய் ஜோதியாய்த் திகழ்ந்திடுவார்
இரத்த சாட்சிகளின் கூட்டம் வெற்றி முழக்கம் செய்யும்
ஜெபித்தோர் சிரத்தை எடுத்தோர் ஆனந்தப் பாடல் இசைப்பார்
இராஜாதி இராஜன் இயேசுவே நீதியாய் அரசாளுவார் .. இன்றே
4. நீ வாழும் இப்பூமி நாசம் ஆகும் காலம் வருதே
உலகின் கடைசி சந்ததி நீயாக இருக்கலாமே
எழும்பு எழும்பு தெபோராள் பாராக்கே விழித்துவிடு
தேவைக்கு ஏற்ற பெலனை இன்றைக்கே பெற்றெழும்பு .. இன்றே
Kaalam Katanthitum Munnar Lyrics in English
Yesuvai eduththu iyampuvom 1. Kaalam kadanthidum munnar karuththuk kolvaar vaarumae njaalaththil Yesuvin naamam eduththuch sellach serumae suththakkaraththai uyarththi Parisuththar yaarum serumae paavaththil saakum janaththai thaduththu niraுththak koodumae .. inte kaalam kadanthidum munnar karuththukkolvaar vaarumae njaalaththil Yesuvin naamam eduththuch sellach serumae 2. Than kadan seyyaa manithar kavalaiyil vaati nirpaar theepaththil ennnney peraathor thukkaththil moolkiduvaar aaththuma aathaayam seyyaar sirasinil atiththukkolvaar maayamaalam purinthorkku semmaiyaayp pathil koduppaar .. inte 3. Seesharkal yaavarum ontay jothiyaayth thikalnthiduvaar iraththa saatchikalin koottam vetti mulakkam seyyum jepiththor siraththai eduththor aananthap paadal isaippaar iraajaathi iraajan Yesuvae neethiyaay arasaaluvaar .. inte 4. nee vaalum ippoomi naasam aakum kaalam varuthae ulakin kataisi santhathi neeyaaka irukkalaamae elumpu elumpu theporaal paaraakkae viliththuvidu thaevaikku aetta pelanai intaikkae pettelumpu .. inte
PowerPoint Presentation Slides for the song Kaalam Katanthitum Munnar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalam Katanthitum Munnar – இயேசுவை எடுத்து இயம்புவோம் PPT
Kaalam Katanthitum Munnar PPT

