Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neere Ennai Kaividaadhavar - நீரே என்னைக் கைவிடாதவர்

நீரே என்னைக் கைவிடாதவர்
விட்டு விலகிடாதவர்
வழியில் காத்து நிற்பவர்
நீரே என்னை முற்றும் காத்தவர்
என்னில் அன்பு கூர்ந்தவர்
என்றும் மாறிடாதவர் 

உந்தன் நாமம் என்றும் மேன்மையானதே
உலகை என்றும் ஆளுமே
எம்மை காக்க வல்லதே
உந்தன் நாமம் இருளை ஒளிரச் செய்ததே
கவலை மறையச் செய்ததே
என்னை வாழவைத்ததே – நீரே

எனக்காய் பாவம் சுமந்தீர்
துயரம் அடைந்தீர்
முழுதும் சகித்தீர்
நிலையற்ற என் வாழ்வை மீட்டீர்
என்னை அளவில்லா அன்பு செய்தீர்
கரம் உயர்த்தி துதிபாடி
உம் பாதம் நான் பணிகின்றேன்
என் கரம் உயர்த்தி துதிபாடி
உம் பாதம் நான் பணிகின்றேன் 

அன்பால் என்னை நீர் கவர்ந்தீர்
ஜீவனைத் தந்தீர்
உம்மை துதித்திடுவோம் (2)

நீதி என்றும் நிலைக்கும்
உந்தன் நாமம் மேன்மையாகும்
நீரோ என்னை அழைத்த
இந்த அழைப்பும் மேன்மையாகும்
உம் கண் எதிரே துதி பாட
ஓர் நாளை நான் காண்பேனோ
உம் கண் எதிரே துதி பாட
ஓர் நாளை நான் காண்பேனோ – நீரே

Neere Ennai Kaividaadhavar Lyrics in English

Neerae ennaik kaividaathavar vittu vilakidaathavar valiyil kaaththu nirpavar neerae ennai muttaுm kaaththavar ennil anpu koornthavar entum maaridaathavar  unthan naamam entum maenmaiyaanathae ulakai entum aalumae emmai kaakka vallathae unthan naamam irulai olirach seythathae kavalai maraiyach seythathae ennai vaalavaiththathae – neerae enakkaay paavam sumantheer thuyaram ataintheer muluthum sakiththeer nilaiyatta en vaalvai meettir ennai alavillaa anpu seytheer karam uyarththi thuthipaati um paatham naan pannikinten en karam uyarththi thuthipaati um paatham naan pannikinten  anpaal ennai neer kavarntheer jeevanaith thantheer ummai thuthiththiduvom (2) neethi entum nilaikkum unthan naamam maenmaiyaakum neero ennai alaiththa intha alaippum maenmaiyaakum um kann ethirae thuthi paada or naalai naan kaannpaeno um kann ethirae thuthi paada or naalai naan kaannpaeno – neerae

PowerPoint Presentation Slides for the song Neere Ennai Kaividaadhavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neere Ennai Kaividaadhavar – நீரே என்னைக் கைவிடாதவர் PPT
Neere Ennai Kaividaadhavar PPT

நீரே என்னை நாமம் அன்பு உயர்த்தி துதிபாடிஉம் பாதம் கண் எதிரே துதி பாடஓர் நாளை என்னைக் கைவிடாதவர்விட்டு விலகிடாதவர்வழியில் காத்து நிற்பவர்நீரே முற்றும் தமிழ்