சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு கிறிஸ்துவுக்குத்
தோத்திரம், புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் !
அந்தரம் புவியும் தந்து , சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார், நமை ஒன்றாய் கூட்டினார், அருள் முடி
சூட்டினார், கிருபையால் தேற்றினாரே, துதி — சுந்தர
1. பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
பாவிகளான நமை உசாவி மீட்டாரே;
வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே,
கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள் – பவத்துயர்
போடுங்கள் – ஜெயத்தைக் கொண்
டாடுங்கள், துதிசொல்லிப் பாடுங்கள், பாடுங்கள் என்றும் — சுந்தர
2. விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே ,
மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே,
அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் கொண்
டாடிட – அவர் பதம்
தேடிட – வெகு திரள்
கூடிடத் துதிபுகழ் பாடிடப் பாடிட என்றும் — சுந்தர
3. சத்தியத் தலைவர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே,
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே,
உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்,
உயர்ந்து – வாழ, தீயோன்
பயந்து – தாழ, மிக
நயந்து கிறிஸ்துவுக்கு ஜெயந்தான், நயந்தான் என்றும் — சுந்தர
Suntharap Parama Thaeva Mainthan Lyrics in English
Suntharap parama thaeva mainthan aesu Kristhuvukkuth
Thoththiram, pukalchchi nithya geerththanam entum !
Antharam puviyum thanthu , sontha jeevanaiyum eenthu
Aattinaar, namai ontay koottinaar, arul muti
Soottinaar, kirupaiyaal thaettinaarae, thuthi — sunthara
1. Paathakap pasaasaal vantha theethenum pavaththaal nontha
Paavikalaana namai usaavi meettarae;
Vaetha pithaavuk kukantha jaathiyaakak kootta vantha
Maesiyaavaip pattaுm visu vaasa veettarae,
Kothanukaa neethiparan paathamathin aatharavil
Koodungal – pavaththuyar
Podungal – jeyaththaik konn
Daadungal, thuthisollip paadungal, paadungal entum — sunthara
2. Vinnnnilulla jothikalum ennnadangaach senaikalum
Vinthaiyaayk Kristhuvaip panninthu pottavae ,
Mannnnilulla jaathikalum nannnum pala porulkalum
Vallaparan enath thuthi solli aeththavae,
Annnalaam pithaavuk korae punnnniyakumaaranaik konn
Daatida – avar patham
Thaetida – veku thiral
Kootidath thuthipukal paatidap paatida entum — sunthara
3. Saththiyath thalaivarkalum viththakap periyaarkalum
Sangaththor kalungirupai thangi vaalavae,
Eththisai manitharkalum pakthar visuvaasikalum
Aeka mikunj samaathaana maaka vaalavae,
Uththama pothakarkalum sathyathiruch Sabaikalum,
Uyarnthu – vaala, theeyon
Payanthu – thaala, mika
Nayanthu Kristhuvukku jeyanthaan, nayanthaan entum — sunthara
PowerPoint Presentation Slides for the song Suntharap Parama Thaeva Mainthan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Suntharap Parama Thaeva Mainthan – சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு கிறிஸ்துவுக்குத் PPT
Suntharap Parama Thaeva Mainthan PPT

