Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 9:33 in Tamil

Home Bible Romans Romans 9 Romans 9:33

ரோமர் 9:33
இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.

Tamil Indian Revised Version
இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுகிறதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடி நடந்தது.

Tamil Easy Reading Version
அந்தக் கல்லைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது. “பாருங்கள்! நான் கல்லை சீயோனில் வைத்திருக்கிறேன். அது மக்களைத் தடுக்கி விழச் செய்யும். அந்தப் பாறை மக்களைத் தடுமாறி விழ அனுமதிக்கும். ஆனால் அக்கல்லிடம் நம்பிக்கைக்கொண்ட எவனும் அவமானம் அடைவதில்லை.”

Thiru Viviliam
இதைப்பற்றியே, ⁽“இதோ தடுக்கி விழச்செய்யும்␢ கற்பாறையையும்␢ இடறச்செய்யும் கல்லையும்␢ சீயோனில் வைக்கிறேன்.␢ அதன்மேல் நம்பிக்கை கொண்டோர்␢ வெட்கத்திற்குள்ளாக மாட்டார்”⁾ என்று மறைநூலில் எழுதியுள்ளது.

Romans 9:32Romans 9

King James Version (KJV)
As it is written, Behold, I lay in Sion a stumblingstone and rock of offence: and whosoever believeth on him shall not be ashamed.

American Standard Version (ASV)
even as it is written, Behold, I lay in Zion a stone of stumbling and a rock of offence: And he that believeth on him shall not be put to shame.

Bible in Basic English (BBE)
As it is said, See, I am putting in Zion a stone causing a fall, and a rock in the way: but he who has faith in him will not be put to shame.

Darby English Bible (DBY)
according as it is written, Behold, I place in Zion a stone of stumbling and rock of offence: and he that believes on him shall not be ashamed.

World English Bible (WEB)
even as it is written, “Behold, I lay in Zion a stumbling stone and a rock of offense; And no one who believes in him will be disappointed.”

Young’s Literal Translation (YLT)
according as it hath been written, `Lo, I place in Sion a stone of stumbling and a rock of offence; and every one who is believing thereon shall not be ashamed.’

ரோமர் Romans 9:33
இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
As it is written, Behold, I lay in Sion a stumblingstone and rock of offence: and whosoever believeth on him shall not be ashamed.

καθὼςkathōska-THOSE
γέγραπταιgegraptaiGAY-gra-ptay
Ἰδού,idouee-THOO
τίθημιtithēmiTEE-thay-mee
ἐνenane
Σιὼνsiōnsee-ONE
λίθονlithonLEE-thone
προσκόμματοςproskommatosprose-KOME-ma-tose
καὶkaikay
πέτρανpetranPAY-trahn
σκανδάλουskandalouskahn-THA-loo
καὶkaikay
πᾶςpaspahs
hooh
πιστεύωνpisteuōnpee-STAVE-one
ἐπ'epape
αὐτῷautōaf-TOH
οὐouoo
καταισχυνθήσεταιkataischynthēsetaika-tay-skyoon-THAY-say-tay

Cross Reference

ஏசாயா 28:16
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும் விசுவாசிக்கிறவன் பதறான்.

ரோமர் 10:11
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.

சங்கீதம் 25:2
என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்.

யோவேல் 2:26
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

ரோமர் 5:5
மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

1 பேதுரு 2:6
அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.

சங்கீதம் 118:22
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.

சங்கீதம் 25:20
என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன்.

பிலிப்பியர் 1:20
நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும் போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.

ஏசாயா 45:17
இஸ்ரவேலோ கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.

ஏசாயா 8:14
அவர் உங்களுக்குப் பரிசுத்தஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.

1 யோவான் 2:28
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்.

2 தீமோத்தேயு 1:12
அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.

ஏசாயா 54:4
பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்.

மத்தேயு 21:42
இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?

மத்தேயு 21:44
இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.


Tags இதோ இடறுதற்கான கல்லையும் தவறுதற்கான கன்மலையையும் சீயோனில் வைக்கிறேன் அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று
Romans 9:33 in Tamil Concordance Romans 9:33 in Tamil Interlinear Romans 9:33 in Tamil Image