1 அரியணையில் வீற்றிருந்தவரது வலக்கையில் ஒரு சுருளேட்டைக் கண்டேன். அதில் உள்ளும் புறமும் எழுதியிருந்தது; அது ஏழு முத்திரை பொறிக்கப் பெற்று மூடப்பட்டிருந்தது.

2 “முத்திரைகளை உடைத்து, ஏட்டைப் பிரிக்கத் தகுதி பெற்றவர் யார்?” என்று வலிமைமிக்க வானதூதர் ஒருவர் உரத்த குரலில் முழங்கக் கண்டேன்.

3 நூலைத் திறந்து படிக்க விண்ணுலகிலோ மண்ணுலகிலோ கீழுலகிலோ இருந்த எவராலும் இயலவில்லை.

4 சுருளேட்டைப் பிரித்துப் படிக்கத் தகுதி பெற்றவர் எவரையும் காணவில்லையே என்று நான் தேம்பி அழுதேன்.

5 அப்பொழுது மூப்பருள் ஒருவர் என்னிடம், “அழாதே, யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்று விட்டார்; அவர் அந்த ஏழு முத்திரைகளையும் உடைத்து ஏட்டைப் பிரித்து விடுவார்” என்று கூறினார்.⒫

6 அந்த நான்கு உயிர்களும் மூப்பர்களும் புடை சூழ, அரியணை நடுவில் ஆட்டுக்குட்டி ஒன்று நிற்கக் கண்டேன். கொல்லப்பட்டதுபோல் அது காணப்பட்டது. அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. அக்கண்கள் மண்ணுலகெங்கும் அனுப்பப்பெற்ற கடவுளின் ஏழு ஆவிகளே.

7 ஆட்டுக்குட்டி முன்சென்று, அரியணையில் வீற்றிருந்தவரின் வலக்கையிலிருந்து அந்த ஏட்டை எடுத்தது.

8 அப்பொழுது அந்த நான்கு உயிர்களும் இருபத்து நான்கு மூப்பர்களும் ஆட்டுக்குட்டிமுன் வீழ்ந்தார்கள்; அவர்கள் ஒவ்வொருவரும் யாழும், சாம்பிராணி நிறைந்த பொற் கிண்ணங்களும் வைத்திருந்தார்கள். இறைமக்களின் வேண்டுதல்களே அக்கிண்ணங்கள்.

9 அவர்கள் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள்:⁽“ஏட்டை எடுக்கவும்␢ அதன் முத்திரைகளை␢ உடைத்துப் பிரிக்கவும்␢ தகுதி பெற்றவர் நீரே.␢ நீர் கொல்லப்பட்டீர்;␢ உமது இரத்தத்தால்␢ குலம், மொழி, நாடு, மக்களினம்␢ ஆகிய அனைத்தினின்றும்␢ மக்களைக் கடவுளுக்கென்று␢ விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர்.⁾

10 ⁽ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும்␢ குருக்களாகவும்␢ அவர்களை எங்கள் கடவுளுக்காக␢ ஏற்படுத்தினீர்.␢ அவர்கள் மண்ணுலகின்மீது␢ ஆட்சி செலுத்துவார்கள்.”⁾⒫

11 தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்:

12 ⁽“கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி␢ வல்லமையும் செல்வமும்␢ ஞானமும் ஆற்றலும்␢ மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும்␢ பெறத் தகுதி பெற்றது”⁾ என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள்.⒫

13 பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும்,⁽“அரியணையில் வீற்றிருப்பவருக்கும்␢ ஆட்டுக்குட்டிக்கும்␢ புகழ்ச்சியும் மாண்பும்␢ பெருமையும் ஆற்றலும்␢ என்றென்றும் உரியன”⁾ என்று பாடக் கேட்டேன்.

14 அதற்கு அந்த நான்கு உயிர்களும், ‘ஆமென்’ என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.

Revelation 5 ERV IRV TRV