1 ⁽நெருக்கடி வேளையில்␢ உமக்கு ஆண்டவர் பதிலளிப்பாராக!␢ யாக்கோபின் கடவுளது பெயர்␢ உம்மைப் பாதுகாப்பதாக!⁾

2 ⁽தூயகத்திலிருந்து அவர் உமக்கு␢ உதவி அனுப்புவாராக!␢ சீயோனிலிருந்து அவர் உமக்குத்␢ துணை செய்வாராக!⁾

3 ⁽உம் உணவுப் படையலை எல்லாம்␢ அவர் நினைவில் கொள்வராக!␢ உமது எரி பலியை␢ ஏற்றுக்கொள்வாராக! (சேலா)⁾

4 ⁽உமது மனம் விரும்புவதை␢ அவர் உமக்குத் தந்தருள்வாராக!␢ உம் திட்டங்களை எல்லாம்␢ நிறைவேற்றுவாராக!⁾

5 ⁽உமது வெற்றியைக் குறித்து␢ மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போமாக!␢ நம் கடவுளின் பெயரால்␢ வெற்றிக்கொடி நாட்டுவோமாக!␢ உம் விண்ணப்பங்களையெல்லாம்␢ ஆண்டவர் நிறைவேற்றுவாராக!⁾

6 ⁽ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு␢ வெற்றி தருகின்றார்.␢ தமது தூய வானத்திலிருந்து␢ அவருக்குப் பதிலளிக்கின்றார்.␢ வெற்றியளிக்கும் தமது வலக்கையின்␢ ஆற்றலைக் காட்டுகின்றார் என்று␢ இப்பொழுது நான் அறிந்து கொள்கிறேன்.⁾

7 ⁽சிலர் தேர்ப்படையிலும்,␢ சிலர் குதிரைப் படையிலும்␢ பெருமை கொள்கின்றனர்;␢ நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின்␢ பெயரில் பெருமை கொள்கின்றோம்.⁾

8 ⁽அவர்கள் தடுமாறி வீழ்ந்தார்கள்;␢ நாமோ நிமிர்ந்து உறுதியாய் நிற்கின்றோம்.⁾

9 ⁽ஆண்டவரே, அரசருக்கு வெற்றியருளும்;␢ நாங்கள் கூப்பிடும் வேளையில்␢ எங்களுக்குப் பதிலளியும்.⁾

Psalm 20 ERV IRV TRV