அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே
இதுகாறும் காத்த தந்தை நீரே;
இனிமேலும் காத்தருள் செய்வீரே,
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! – அதிகாலை
1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!
ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?
எனக்கான ஈசனே! வான ராசனே!
இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! – அதிகாலை
2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது
தப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,
விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?
விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? – அதிகாலை
3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே!
தீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
பரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே!
புகழார நாதனே! வேத போதனே!
பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! – அதிகாலை
Athikaalaiyilumaith Thaeduvaen Lyrics in English
Athikaalaiyilumaith thaeduvaen mulu manathaalae
Thaevaaseer vaatham pera naaduvaen jepa thapaththaalae
Ithukaaraுm kaaththa thanthai neerae;
Inimaelum kaaththarul seyveerae,
Pathivaaka ummilae naan nilaikkavae,
Paththiramaay enai uththamanaakkidum , thaevae! – athikaalai
1. Ponaraamuluvathum paathukaaththarulina pothaa!
Eppothum engaludaniruppathaay uraiththa nal naathaa!
Eenappaavik kaethuthunnai lokilunndu porpaathaa?
Enakkaana eesanae! Vaana raasanae!
Intha naalilum oru panthamillaamal kaarum neethaa! – athikaalai
2. Palasothanaikalaal soolnthunaan kalangidumpothu
Thappaathu ninkirupai thaangida vaenum appothu,
Vilakaathu ensamookam enta vaakkil thavaraேthu?
Visuvaasang konndu meyp paasamoonntida
Vikkinam yaavilum vetti kaanuvaen malaivaethu? – athikaalai
3. Nararyaavarkkumutta nannpanaay nadanthida vaiyae!
Theenaavin paavamara nanmaikal molinthidach seyyae!
Paraloka aaviyainal maari polenilae peyyae!
Pukalaara naathanae! Vaetha pothanae!
Pooranamaay unaip pottaுvaen, thinan thinam meyyae! – athikaalai
PowerPoint Presentation Slides for the song Athikaalaiyilumaith Thaeduvaen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athikaalaiyilumaith Thaeduvaen – அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே PPT
Athikaalaiyilumaith Thaeduvaen PPT

