Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 18:1 in Tamil

Home Bible Joshua Joshua 18 Joshua 18:1

யோசுவா 18:1
இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை அமைத்தார்கள். தேசம் அவர்களின் வசமானது.

Tamil Easy Reading Version
சீலோவில் இஸ்ரவேலர் எல்லோரும் ஒன்றாகக் கூடினார்கள், அங்கு ஆசரிப்புக் கூடாரத்தை நிறுவினர். இஸ்ரவேலர் தேசத்தில் ஆட்சி செலுத்தினர். அத்தேசத்தின் பகைவர்களை எல்லாம் அவர்கள் வென்றனர்.

Thiru Viviliam
இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பு முழுவதும் சீலோவில் ஒன்று கூடியது. அங்குச் சந்திப்பு கூடாரத்தை அமைத்தனர். ஏற்கெனவே அவர்கள் நிலத்தைக் கைப்பற்றியிருந்தனர்.⒫

Title
தேசத்தின் பிறபகுதிகளைப் பங்கிடுதல்

Other Title
எஞ்சிய நிலத்தைப் பங்கிடல்

Joshua 18Joshua 18:2

King James Version (KJV)
And the whole congregation of the children of Israel assembled together at Shiloh, and set up the tabernacle of the congregation there. And the land was subdued before them.

American Standard Version (ASV)
And the whole congregation of the children of Israel assembled themselves together at Shiloh, and set up the tent of meeting there: and the land was subdued before them.

Bible in Basic English (BBE)
And all the meeting of the children of Israel came together at Shiloh and put up the Tent of meeting there: and the land was crushed before them.

Darby English Bible (DBY)
And the whole assembly of the children of Israel gathered together at Shiloh, and set up the tent of meeting there; and the land was subdued before them.

Webster’s Bible (WBT)
And the whole congregation of the children of Israel assembled at Shiloh, and set up the tabernacle of the congregation there: and the land was subdued before them.

World English Bible (WEB)
The whole congregation of the children of Israel assembled themselves together at Shiloh, and set up the tent of meeting there: and the land was subdued before them.

Young’s Literal Translation (YLT)
And all the company of the sons of Israel are assembled `at’ Shiloh, and they cause the tent of meeting to tabernacle there, and the land hath been subdued before them.

யோசுவா Joshua 18:1
இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று.
And the whole congregation of the children of Israel assembled together at Shiloh, and set up the tabernacle of the congregation there. And the land was subdued before them.

וַיִּקָּ֨הֲל֜וּwayyiqqāhălûva-yee-KA-huh-LOO
כָּלkālkahl
עֲדַ֤תʿădatuh-DAHT
בְּנֵֽיbĕnêbeh-NAY
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
שִׁלֹ֔הšilōshee-LOH
וַיַּשְׁכִּ֥ינוּwayyaškînûva-yahsh-KEE-noo
שָׁ֖םšāmshahm
אֶתʾetet
אֹ֣הֶלʾōhelOH-hel
מוֹעֵ֑דmôʿēdmoh-ADE
וְהָאָ֥רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
נִכְבְּשָׁ֖הnikbĕšâneek-beh-SHA
לִפְנֵיהֶֽם׃lipnêhemleef-nay-HEM

Cross Reference

யோசுவா 19:51
ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திரப்பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.

எரேமியா 26:6
நான் இந்த ஆலயத்தைச் சீலோவாப்போலாக்கி, இந்த நகரத்தைப் பூமியிலுள்ள எல்லா ஜாதிகளுக்கு முன்பாகவும் சாபமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

1 சாமுவேல் 1:3
அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்து கொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் இருந்தார்கள்.

யோசுவா 21:2
நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்கள் மிருகஜீவன்களுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி, கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள்.

எரேமியா 7:12
நான் முந்தி என் நாமம் விளங்கப்பண்ணின சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்கு நீங்கள் போய், இஸ்ரவேல் ஜனத்தினுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள்.

1 சாமுவேல் 1:24
அவள் அவனைப் பால்மறக்கப்பண்ணினபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக் கொண்டு, சீலோவிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாயிருந்தது.

நியாயாதிபதிகள் 18:31
தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுவதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்.

யோசுவா 22:9
அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, தாங்கள் கைவசம் பண்ணிக்கொண்ட தங்கள் காணியாட்சி தேசமான கீலேயாத் தேசத்துக்குப் போகும்படிக்கு, கானான்தேசத்திலுள்ள சிலோவிலிருந்த இஸ்ரவேல் புத்திரரை விட்டுத் திரும்பிப்போனார்கள்.

சங்கீதம் 78:66
தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார்.

1 இராஜாக்கள் 14:4
அப்படியே யெரொபெயாமின் மனைவி செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தாள்; அகியாவோ முதிர் வயதானதினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக் கூடாதிருந்தான்.

1 இராஜாக்கள் 14:2
அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ; இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.

1 இராஜாக்கள் 2:27
அப்படியே கர்த்தர் சீலோவிலே ஏலியின் வீட்டாரைக்குறித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாக, சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான்.

1 சாமுவேல் 4:3
ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி ரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள்.

நியாயாதிபதிகள் 21:19
பின்னும், இதோ, பெத்தேலுக்கு வடக்கே பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற பாதைக்கு கிழக்காகவும் லிபோனாவுக்குத் தெற்காகவும் இருக்கிற சீலோவிலே வருஷந்தோறும் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடப்படுகிறதே என்று சொல்லி,


Tags இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள் தேசம் அவர்கள் வசமாயிற்று
Joshua 18:1 in Tamil Concordance Joshua 18:1 in Tamil Interlinear Joshua 18:1 in Tamil Image