1 ⁽நாங்கள் அறிவித்ததை நம்பியவர்␢ யார்? ஆண்டவரின் ஆற்றல்␢ யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?⁾

2 ⁽இளந்தளிர்போலும்␢ வறண்டநில வேர்போலும்␢ ஆண்டவர் முன்னிலையில்␢ அவர் வளர்ந்தார்;␢ நாம் பார்ப்பதற்கேற்ற␢ அமைப்போ அவருக்கில்லை;␢ நாம் விரும்பத்தக்க தோற்றமும்␢ அவருக்கில்லை;⁾

3 ⁽அவர் இகழப்பட்டார்;␢ மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்;␢ வேதனையுற்ற மனிதராய் இருந்தார்;␢ நோயுற்று நலிந்தார்;␢ காண்போர் தம் முகத்தை␢ மூடிக்கொள்ளும் நிலையில்␢ அவர் இருந்தார்;␢ அவர் இழிவுபடுத்தப்பட்டார்;␢ அவரை நாம் மதிக்கவில்லை.⁾

4 ⁽மெய்யாகவே அவர் நம் பிணிகளைத்␢ தாங்கிக்கொண்டார்;␢ நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்;␢ நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு␢ நொறுக்கப்பட்டவர் என்றும்␢ சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும்␢ எண்ணினோம்.⁾

5 ⁽அவரோ, நம் குற்றங்களுக்காகக்␢ காயமடைந்தார்;␢ நம்தீச்செயல்களுக்காக␢ நொறுக்கப்பட்டார்;␢ நமக்கு நிறைவாழ்வை அளிக்க␢ அவர் தண்டிக்கப்பட்டார்;␢ அவர்தம் காயங்களால்␢ நாம் குணமடைகின்றோம்.⁾

6 ⁽ஆடுகளைப் போல நாம் அனைவரும்␢ வழிதவறி அலைந்தோம்;␢ நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்;␢ ஆண்டவரோ நம் அனைவரின்␢ தீச்செயல்களையும்␢ அவர்மேல் சுமத்தினார்.⁾

7 ⁽அவர் ஒடுக்கப்பட்டார்;␢ சிறுமைப்படுத்தப்பட்டார்;␢ ஆயினும், அவர் தம்␢ வாயைத் திறக்கவில்லை;␢ அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட␢ ஆட்டுக்குட்டிபோலும்␢ உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில்␢ கத்தாத செம்மறி போலும்␢ அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.⁾

8 ⁽அவர் கைது செய்யப்பட்டு,␢ தீர்ப்பிடப்பட்டு,␢ இழுத்துச் செல்லப்பட்டார்;␢ அவருக்கு நேர்ந்ததைப்பற்றி␢ அக்கறை கொண்டவர் யார்?␢ ஏனெனில், வாழ்வோர் உலகினின்று␢ அவர் அகற்றப்பட்டார்;␢ என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக்␢ கொலையுண்டார்.⁾

9 ⁽வன்செயல் எதுவும்␢ அவர் செய்ததில்லை;␢ வஞ்சனை எதுவும்␢ அவர் வாயில் இருந்ததில்லை;␢ ஆயினும், தீயவரிடையே␢ அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்;␢ செத்தபோது அவர்␢ செல்வரோடு இருந்தார்.⁾

10 ⁽அவரை நொறுக்கவும்␢ நோயால் வதைக்கவும்␢ ஆண்டவர் திருவுளம் கொண்டார்;␢ அவர் தம் உயிரைக்␢ குற்றநீக்கப்பலியாகத் தந்தார்;␢ எனவே, தம் வழிமரபு கண்டு␢ நீடு வாழ்வார்;␢ ஆண்டவரின் திருவுளம்␢ அவர் கையில் சிறப்புறும்.⁾

11 ⁽அவர் தம் துன்ப வாழ்வின்␢ பயனைக் கண்டு நிறைவடைவார்;␢ நேரியவராகிய என் ஊழியர்␢ தம் அறிவால்␢ பலரை நேர்மையாளராக்குவார்;␢ அவர்களின் தீச்செயல்களைத்␢ தாமே சுமந்து கொள்வார்.⁾

12 ⁽ஆதலால், நான் அவருக்கு␢ மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்;␢ அவரும் வலியவரோடு␢ கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்;␢ ஏனெனில், அவர் தம்மையே␢ சாவுக்கு கையளித்தார்;␢ கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்;␢ ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்;␢ கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.⁾

Isaiah 53 ERV IRV TRV