1 ⁽இதோ! என் ஊழியர்! அவருக்கு நான்␢ ஆதரவு அளிக்கிறேன்;␢ நான் தேர்ந்துகொண்டவர் அவர்;␢ அவரால் என் நெஞ்சம்␢ பூரிப்படைகின்றது;␢ அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்;␢ அவர் மக்களினங்களுக்கு␢ நீதி வழங்குவார்.⁾

2 ⁽அவர் கூக்குரலிடமாட்டார்;␢ தம்குரலை உயர்த்தமாட்டார்;␢ தம் குரலொலியைத்␢ தெருவில் எழுப்பவுமாட்டார்.⁾

3 ⁽நெரிந்த நாணலை முறியார்;␢ மங்கி எரியும் திரியை அணையார்;␢ உண்மையாகவே␢ நீதியை நிலை நாட்டுவார்.⁾

4 ⁽உலகில் நீதியை நிலைநாட்டும்வரை␢ அவர் சோர்வடையார்;␢ மனம் தளரமாட்டார்;␢ அவரது நீதிநெறிக்காகத்␢ தீவு நாட்டினர் காத்திருப்பர்.⁾

5 ⁽விண்ணுலகைப் படைத்து விரித்து,␢ மண்ணுலகைப் பரப்பி␢ உயிரினங்களைத் தோன்றச் செய்து,␢ அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து,␢ அதில் நடமாடுவோர்க்கு␢ ஆவியை அளித்தவருமான␢ இறைவனாகிய ஆண்டவர்␢ கூறுவது இதுவே:⁾

6 ⁽ஆண்டவராகிய நான்␢ நீதியை நிலைநாட்டுமாறு␢ உம்மை அழைத்தேன்;␢ உம் கையைப் பற்றிப்பிடித்து,␢ உம்மைப் பாதுகாப்பேன்;␢ மக்களுக்கு உடன்படிக்கையாகவும்␢ பிற இனத்தாருக்கு ஒளியாகவும்␢ நீர் இருக்குமாறு செய்வேன்.⁾

7 ⁽பார்வை இழந்தோரின்␢ கண்களைத் திறக்கவும்,␢ கைதிகளின் தளைகளை அறுக்கவும்,␢ இருளில் இருப்போரைச்␢ சிறையினின்று மீட்கவும்␢ உம்மை அழைத்தேன்.⁾

8 ⁽நானே ஆண்டவர்;␢ அதுவே என் பெயர்;␢ என் மாட்சியைப் பிறருக்கோ,␢ என் புகழைச் சிலைகளுக்கோ␢ விட்டுக்கொடேன்.⁾

9 ⁽முன்னர் நான் அறிவித்தவை␢ நிகழ்ந்துவிட்டன;␢ புதியனவற்றை நான் அறிவிக்கிறேன்;␢ அவை தோன்றுமுன்னே␢ உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.⁾

10 ⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ உலகின் எல்லையெங்கும்␢ அவர் புகழ்ப் பாடுங்கள்;␢ கடலில் பயணம் செய்வோரே,␢ கடல்வாழ் உயிரினங்களே,␢ தீவு நாடுகளே, அவற்றில் குடியிருப்போரே,␢ அவரைப் போற்றுங்கள்.⁾

11 ⁽பாலைநிலமும் அதன் நகர்களும்␢ கேதாரியர் வாழ் ஊர்களும்␢ பேரொலி எழுப்பட்டும்;␢ சேலா வாழ் மக்களும்␢ மகிழ்ந்து பாடட்டும்;␢ மலைகளின் உச்சியிலிருந்து␢ அவர்கள் ஆர்ப்பரிக்கட்டும்.⁾

12 ⁽அவர்கள் ஆண்டவருக்கு␢ மாட்சி அளிப்பார்கள்;␢ அவர் புகழைத்␢ தீவு நாட்டினரிடையே அறிவிப்பார்கள்.⁾

13 ⁽ஆண்டவர் வலியோன் எனப்␢ புறப்பட்டுச் செல்வார்;␢ போர்வீரரைப்போல்␢ தீராச் சினம் கொண்டு எழுவார்;␢ உரத்தக்குரல் எழுப்பி, முழக்கமிடுவார்;␢ தம் பகைவருக்கு எதிராக␢ வீரத்துடன் செயல்படுவார்.⁾

14 ⁽“வெகுகாலமாய் நான்␢ மௌனம் காத்துவந்தேன்;␢ அமைதியாய் இருந்து என்னைக்␢ கட்டுப்படுத்திக்கொண்டேன்,␢ இப்பொழுதோ,␢ பேறுகாலப் பெண்போல்␢ வேதனைக்குரல் எழுப்புகின்றேன்;␢ பெருமூச்சு விட்டுத் திணறுகின்றேன்.⁾

15 ⁽மலைகளையும் குன்றுகளையும்␢ பாழாக்குவேன்;␢ அவற்றின் புல்பூண்டுகளை␢ உலர்ந்து போகச் செய்வேன்;␢ ஆறுகளைத் திட்டுகளாக மாற்றுவேன்;␢ ஏரிகளை வற்றிப்போகச் செய்வேன்.⁾

16 ⁽பார்வையற்றோரை␢ அவர்கள் அறியாத பாதையில்␢ நடத்திச் செல்வேன்;␢ அவர்கள் பழகாத சாலைகளில்␢ வழிநடத்துவேன்;␢ அவர்கள்முன்␢ இருளை ஒளியாக்குவேன்;␢ கரடுமுரடான இடங்களைச்␢ சமதளமாக்குவேன்;␢ இவை நான்␢ அவர்களுக்காகச் செய்யவிருப்பன;␢ நான் அவர்களைக் கைநெகிழ மாட்டேன்.⁾

17 ⁽சிலைகள்மேல் நம்பிக்கை வைப்போரும்,␢ படிமங்களிடம்,␢ ‘நீங்கள் எங்கள் தெய்வங்கள்’␢ என்போரும்␢ இழிநிலையடைந்து, மானக்கேடுறுவர்.⁾

18 ⁽செவிடரே, கேளுங்கள்;␢ குருடரே, கவனமாய்ப் பாருங்கள்.⁾

19 ⁽குருடாய் இருப்பவன் எவன்?␢ என் ஊழியன்தான்!␢ செவிடாய் இருப்பவன் எவன்?␢ நான் அனுப்பும் தூதன் தான்!␢ எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவன் போல்␢ குருடன் யார்?␢ ஆண்டவரின் ஊழியன்போல்␢ பார்வையற்றவன் யார்?⁾

20 ⁽பலவற்றை நீ பார்த்தும்,␢ கவனம் செலுத்தவில்லை;␢ உன் செவிகள் திறந்திருந்தும்␢ எதுவும் உன் காதில் விழவில்லை.⁾

21 ⁽ஆண்டவர் தம் நீதியின் பொருட்டுத்␢ தம் திருச்சட்டத்தைச் சிறப்பித்து␢ மேன்மைப்படுத்த ஆர்வமுற்றார்.⁾

22 ⁽ஆனால் இந்த மக்களினம்␢ கொள்ளையடிக்கப்பட்டுச்␢ சூறையாடப்பட்டது;␢ அவர்கள் அனைவரும்␢ குழிகளில் சிக்கினர்;␢ சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர்;␢ விடுவிப்பார் எவருமிலர்;␢ கவர்ந்து செல்லப்பட்டனர்;␢ கொள்ளைப் பொருளாயினர்;␢ ‘திருப்பி அனுப்பு’ என்று சொல்வாரில்லை.⁾

23 ⁽உங்களுள் எவன்␢ இதற்குச் செவி கொடுப்பான்?␢ எவன் வருங்காலத்திற்காகக்␢ கவனித்துக் கேட்பான்?⁾

24 ⁽யாக்கோபைக் கொள்ளைக்காரரிடமும்␢ இஸ்ரயேலலைக் கள்வரிடமும்␢ ஒப்புவித்தவர் யார்?␢ ஆண்டவரன்றோ?␢ அவருக்கு எதிராக அன்றோ␢ நாம் பாவம் செய்தோம்!␢ மக்கள் அவருடைய நெறிகளைப்␢ பின்பற்ற விரும்பவில்லை;␢ அவரது திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியவில்லை.⁾

25 ⁽ஆகவே அவர் அவர்கள்மேல்␢ தம் கோபக்கனலைக் கொட்டினார்;␢ கடும் போர் மூண்டது;␢ அவரது சினம் அவர்களைச்␢ சூழ்ந்து பற்றி எரிந்தது;␢ ஆயினும் அவர்கள் உணரவில்லை;␢ அவர்களை நெருப்பு சுட்டெரித்தது;␢ ஆயினும் அவர்கள்␢ சிந்தையில் கொள்ளவில்லை.⁾