Full Screen ?
 

Engae Sumanthu Pokireer - எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்

எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்?

1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமது
அங்கம் முழுதும் நோக, ஐயா, என் ஏசு நாதா – எங்கே

2. தோளில் பாரம் அழுத்த, தூக்கப் பெலம் இல்லாமல்,
தாளுந் தத்தளிக்கவே, தாப சோபம் உற, நீர் – எங்கே

3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக,
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர – எங்கே

4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர,
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர – எங்கே

5. வல்ல பேயைக் கொல்லவும், மரணந்தணை வெல்லவும்,
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் – எங்கே

6. மாசணுகாத சத்திய வாசகனே, உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து – எங்கே

Engae Sumanthu Pokireer Lyrics in English

Engae sumanthu pokireer? Siluvaiyai neer
Engae sumanthu pokireer?

1. Engae sumanthu poreer? Inthak kaanalil umathu
Angam muluthum Nnoka, aiyaa, en aesu naathaa – engae

2. Tholil paaram aluththa, thookkap pelam illaamal,
Thaalun thaththalikkavae, thaapa sopam ura, neer – engae

3. Vaathaiyinaal udalum vaatith thavippunndaaka,
Paetham illaach seemonum pinnaakath thaangivara – engae

4. Thaayaar aluthuvara saarnthavar pin thodara,
Maayam illaatha njaana maathar pulampi vara – engae

5. Valla paeyaik kollavum, marananthannai vellavum,
Ellai illaap paavangal ellaam naasamaakavum – engae

6. Maasanukaatha saththiya vaasakanae, umathu
Thaasarkalaik kaakkavum thaangaach sumaiyai eduththu – engae

PowerPoint Presentation Slides for the song Engae Sumanthu Pokireer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engae Sumanthu Pokireer – எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர் PPT
Engae Sumanthu Pokireer PPT

எங்கே சுமந்து போகிறீர் நீர் உமது சிலுவையை போறீர் கானலில் அங்கம் முழுதும் நோக ஐயா ஏசு நாதா தோளில் பாரம் அழுத்த தூக்கப் தமிழ்