Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 33:29 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 33 Deuteronomy 33:29

உபாகமம் 33:29
இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட மக்களே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்கு உதவிசெய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் எதிரிகள் உன்னை நிந்தித்துப் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய மேடுகளை மிதிப்பாய் என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். வேறு எந்த நாடும் உன்னைப் போன்றில்லை. கர்த்தர் உன்னைக் காப்பாற்றினார். கர்த்தர் உனக்குப் பாதுகாப்பான கேடயத்தைப் போன்றிருக்கிறார்! கர்த்தர் பலமுள்ள வாளைப் போன்றும் இருக்கிறார். உனது பகைவர்கள் உனக்குப் பயப்படுவார்கள். நீ அவர்களது பரிசுத்த இடங்களை மிதிப்பாய்!”

Thiru Viviliam
⁽இஸ்ரயேலே! நீ பேறு பெற்றவன்;␢ ஆண்டவரால் மீட்கப்பட்ட␢ மக்களினமே! உன்னைப்போல்␢ வேறு இனம் உண்டோ?␢ உன்னைக் காக்கும் கேடயமும் உன்␢ வெற்றி வாளும் அவரே!␢ உன் பகைவர் உன்முன் கூனிக்␢ குறுகுவர்! அவர்களின்␢ தொழுகைமேடுகளை நீ ஏறி மிதிப்பாய்.⁾

Deuteronomy 33:28Deuteronomy 33

King James Version (KJV)
Happy art thou, O Israel: who is like unto thee, O people saved by the LORD, the shield of thy help, and who is the sword of thy excellency! and thine enemies shall be found liars unto thee; and thou shalt tread upon their high places.

American Standard Version (ASV)
Happy art thou, O Israel: Who is like unto thee, a people saved by Jehovah, The shield of thy help, And the sword of thy excellency! And thine enemies shall submit themselves unto thee; And thou shalt tread upon their high places.

Bible in Basic English (BBE)
Happy are you, O Israel: who is like you, a people whose saviour is the Lord, whose help is your cover, whose sword is your strength! All those who are against you will put themselves under your rule, and your feet will be planted on their high places.

Darby English Bible (DBY)
Happy art thou, Israel! Who is like unto thee, a people saved by Jehovah, The shield of thy help, And the sword of thine excellency? And thine enemies shall come cringing to thee; And thou shalt tread upon their high places.

Webster’s Bible (WBT)
Happy art thou, O Israel: who is like to thee, O people saved by the LORD, the shield of thy help, and who is the sword of thy excellence! and thy enemies shall be found liars to thee; and thou shalt tread upon their high places.

World English Bible (WEB)
Happy are you, Israel: Who is like you, a people saved by Yahweh, The shield of your help, The sword of your excellency! Your enemies shall submit themselves to you; You shall tread on their high places.

Young’s Literal Translation (YLT)
O thy happiness, O Israel! who is like thee? A people saved by Jehovah, The shield of thy help, And He who `is’ the sword of thine excellency: And thine enemies are subdued for thee, And thou on their high places dost tread.’

உபாகமம் Deuteronomy 33:29
இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.
Happy art thou, O Israel: who is like unto thee, O people saved by the LORD, the shield of thy help, and who is the sword of thy excellency! and thine enemies shall be found liars unto thee; and thou shalt tread upon their high places.

אַשְׁרֶ֨יךָʾašrêkāash-RAY-ha
יִשְׂרָאֵ֜לyiśrāʾēlyees-ra-ALE
מִ֣יmee
כָמ֗וֹךָkāmôkāha-MOH-ha
עַ֚םʿamam
נוֹשַׁ֣עnôšaʿnoh-SHA
בַּֽיהוָ֔הbayhwâbai-VA
מָגֵ֣ןmāgēnma-ɡANE
עֶזְרֶ֔ךָʿezrekāez-REH-ha
וַֽאֲשֶׁרwaʾăšerVA-uh-sher
חֶ֖רֶבḥerebHEH-rev
גַּֽאֲוָתֶ֑ךָgaʾăwātekāɡa-uh-va-TEH-ha
וְיִכָּֽחֲשׁ֤וּwĕyikkāḥăšûveh-yee-ka-huh-SHOO
אֹֽיְבֶ֙יךָ֙ʾōyĕbêkāoh-yeh-VAY-HA
לָ֔ךְlāklahk
וְאַתָּ֖הwĕʾattâveh-ah-TA
עַלʿalal
בָּֽמוֹתֵ֥ימוֹbāmôtêmôba-moh-TAY-moh
תִדְרֹֽךְ׃tidrōkteed-ROKE

Cross Reference

சங்கீதம் 115:9
இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.

ஏசாயா 45:17
இஸ்ரவேலோ கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.

2 சாமுவேல் 7:23
உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ? பூலோகத்து ஜாதிகளில் இந்த ஒரே ஜாதியை தேவன் தமக்கு ஜனமாக மீட்கிறதற்கும், தமக்குக் கீர்த்தி விளங்கப்பண்ணுகிறதற்கும் ஏற்பட்டாரே; தேவரீர் எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டுவந்த உம்முடைய ஜனத்திற்குமுன்பாக பயங்கரமான பெரிய காரியங்களை நடத்தி, உம்முடைய தேசத்திற்கும், அதிலிருந்த ஜாதிகளுக்கும், அவர்கள் தேவர்களுக்கும், உமது மகிமையை விளங்கச்செய்து,

ஆதியாகமம் 15:1
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்; ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.

எண்ணாகமம் 23:20
இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக் கூடாது.

உபாகமம் 4:7
நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?

உபாகமம் 32:13
பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார்; வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார்.

சங்கீதம் 66:3
தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள்.

சங்கீதம் 144:15
இவ்விதமான சீரைப்பெற்றஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.

ஏசாயா 12:2
இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

ஆபகூக் 3:19
ஆண்டவராகிய கர்த்தர் என்பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:21
மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.

வெளிப்படுத்தின விசேஷம் 1:16
தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது.

1 தீமோத்தேயு 4:10
இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை, வைத்திருக்கிறோம்.

எரேமியா 12:12
கொள்ளைக்காரர் வனாந்தரத்திலுள்ள எல்லா உயர்நிலங்களின்மேலும் வருகிறார்கள்; கர்த்தருடைய பட்டயம் தேசத்தின் ஒருமுனைதொடங்கித் தேசத்தின் மறுமுனைமட்டும் பட்சித்துக்கொண்டிருக்கும்; மாம்சமாகிய ஒன்றுக்கும் சமாதானமில்லை.

ஏசாயா 34:5
வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ ஏதோமின்மேலும், நான் சங்காரத்துக்கு நியமித்த ஜனத்தின் மேலும், அது நியாயஞ்செய்ய இறங்கும்.

எண்ணாகமம் 24:5
யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!

யோசுவா 10:24
அவர்களை யோசுவாவினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனுஷரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்ட வந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.

சங்கீதம் 7:12
அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.

சங்கீதம் 18:44
அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் எனக்கு இச்சகம்பேசி அடங்குகிறார்கள்.

சங்கீதம் 33:12
கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.

சங்கீதம் 33:20
நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.

சங்கீதம் 45:3
சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,

சங்கீதம் 84:11
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.

ஏசாயா 27:1
அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.

எரேமியா 47:6
ஆ கர்த்தரின் பட்டயமே, எந்த மட்டும் அமராதிருப்பாய்? உன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு.

சங்கீதம் 81:15
அப்பொழுது கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.

2 சாமுவேல் 22:45
அந்நியர் இச்சகம் பேசி எனக்கு அடங்கி, என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.

நியாயாதிபதிகள் 7:20
மூன்று படைகளின் மனுஷரும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,


Tags இஸ்ரவேலே நீ பாக்கியவான் கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே உனக்கு ஒப்பானவன் யார் உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள் அவர்கள் மேடுகளை மிதிப்பாய் என்று சொன்னான்
Deuteronomy 33:29 in Tamil Concordance Deuteronomy 33:29 in Tamil Interlinear Deuteronomy 33:29 in Tamil Image