Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 18:4 in Tamil

Home Bible Revelation Revelation 18 Revelation 18:4

வெளிப்படுத்தின விசேஷம் 18:4
பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

Tamil Indian Revised Version
பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் மக்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நடக்கும் வாதைகளில் சிக்காமலும் இருக்கும்படி அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

Tamil Easy Reading Version
பிறகு நான் பரலோகத்திலிருந்து இன்னொரு குரலையும் கேட்டேன். “ஓ! என் மக்களே, அவளுடைய பாவத்தில் உங்களுக்குப் பங்கில்லாதபடிக்கு வெளியே வாருங்கள். பிறகு அவளுக்கிருக்கும் வாதைகள் எதுவும் உங்களுக்கிருக்காது.

Thiru Viviliam
பின்னர் விண்ணிலிருந்து இன்னொரு குரலைக் கேட்டேன்; அது சொன்னது:⁽ என் மக்களே,␢ அந்நகரைவிட்டு வெளியேறுங்கள்,␢ அவளுடைய பாவங்களில்␢ பங்கு கொள்ளாதிருக்கவும்␢ அவளுக்கு நேரிடும் வாதைகளுக்கு␢ உட்படாதிருக்கவும்␢ வெளியே போய்விடுங்கள்.⁾

Revelation 18:3Revelation 18Revelation 18:5

King James Version (KJV)
And I heard another voice from heaven, saying, Come out of her, my people, that ye be not partakers of her sins, and that ye receive not of her plagues.

American Standard Version (ASV)
And I heard another voice from heaven, saying, Come forth, my people, out of her, that ye have no fellowship with her sins, and that ye receive not of her plagues:

Bible in Basic English (BBE)
And another voice from heaven came to my ears, saying, Come out of her, my people, so that you may have no part in her sins and in her punishments.

Darby English Bible (DBY)
And I heard another voice out of the heaven saying, Come out of her, my people, that ye have not fellowship in her sins, and that ye do not receive of her plagues:

World English Bible (WEB)
I heard another voice from heaven, saying, “Come out of her, my people, that you have no participation in her sins, and that you don’t receive of her plagues,

Young’s Literal Translation (YLT)
And I heard another voice out of the heaven, saying, `Come forth out of her, My people, that ye may not partake with her sins, and that ye may not receive of her plagues,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 18:4
பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
And I heard another voice from heaven, saying, Come out of her, my people, that ye be not partakers of her sins, and that ye receive not of her plagues.

Καὶkaikay
ἤκουσαēkousaA-koo-sa
ἄλληνallēnAL-lane
φωνὴνphōnēnfoh-NANE
ἐκekake
τοῦtoutoo
οὐρανοῦouranouoo-ra-NOO
λέγουσανlegousanLAY-goo-sahn
Ἐξέλθετεexeltheteayks-ALE-thay-tay
ἐξexayks
αὐτῆςautēsaf-TASE
hooh
λαόςlaosla-OSE
μουmoumoo
ἵναhinaEE-na
μὴmay
συγκοινωνήσητεsynkoinōnēsētesyoong-koo-noh-NAY-say-tay
ταῖςtaistase
ἁμαρτίαιςhamartiaisa-mahr-TEE-ase
αὐτῆςautēsaf-TASE
καὶkaikay
ἵναhinaEE-na
μὴmay
λάβητεlabēteLA-vay-tay
ἐκekake
τῶνtōntone
πληγῶνplēgōnplay-GONE
αὐτῆςautēsaf-TASE

Cross Reference

2 கொரிந்தியர் 6:17
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 51:45
என் ஜனங்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்துக்குத் தப்பும்படி அவனவன் தன்தன் ஆததுமாவை இரட்சித்துக்கொள்ளக்கடவன்.

எரேமியா 51:6
நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்புவியுங்கள்; இது கர்த்தர் அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார்.

எரேமியா 50:8
பாபிலோனின் நடுவிலிருந்தோடி கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின்முன்நடக்கும் கடாக்களைப்போல் இருங்கள்.

ஏசாயா 52:11
புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.

ஏசாயா 48:20
பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்; கல்தேயரைவிட்டு ஓடிவாருங்கள்; கர்த்தர் தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்கள்; இதைக் கெம்பீரசத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்துங்கள் பூமியின் கடையாந்தரமட்டும் வெளிப்படுத்துங்கள் என்கிறார்.

2 யோவான் 1:11
அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கிறான்.

எண்ணாகமம் 16:26
அவன் சபையாரை நோக்கி இந்தத் துஷ்டமனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றான்.

1 தீமோத்தேயு 5:22
ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.

மத்தேயு 24:15
மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,

எரேமியா 51:50
பட்டயத்துக்குத் தப்பினவர்களே, தங்கித்தரியாமல் நடந்துவாருங்கள்; தூரத்திலே கர்த்தரை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது.

சங்கீதம் 50:18
நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.

ஆதியாகமம் 19:12
பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ.

மத்தேயு 23:30
எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.


Tags பின்பு வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன் அது என் ஜனங்களே நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும் அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்
Revelation 18:4 in Tamil Concordance Revelation 18:4 in Tamil Interlinear Revelation 18:4 in Tamil Image