Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 24:17 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 24 2 Samuel 24:17

2 சாமுவேல் 24:17
ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம்பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்.

Tamil Indian Revised Version
மக்களை வேதனைப்படுத்துகிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவம் செய்தேன்; நான்தான் அக்கிரமம் செய்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என்னுடைய தகப்பன் வீட்டுக்கும் விரோதமாக இருப்பதாக என்று விண்ணப்பம்செய்தான்.

Tamil Easy Reading Version
ஜனங்களைக் கொன்ற தூதனை தாவீது பார்த்தான். தாவீது கர்த்தரிடம் பேசினான். தாவீது, “நான் பாவம் செய்தேன்! நான் தவறிழைத்தேன். இந்த ஜனங்கள் ஆடுகளைப் போன்று என்னைப் பின் பற்றினார்கள். அவர்கள் தவறேதும் செய்யவில்லை. என்னையும் எனது தந்தையின் குடும்பத்தையும் நீங்கள் தண்டியுங்கள்” என்றான்.

Thiru Viviliam
மக்களை அழித்துக்கொண்டிருந்த ஆண்டவரின் தூதரைத் தாவீது கண்டபோது, அவர் ஆண்டவரை நோக்கி, “பாவம் செய்தவன் நானல்லவோ? தீச்செயல் புரிந்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது? இப்போது உம் கை என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் வதைப்பதாக!” என்று கூறினார்.⒫

Title
அர்வனாவின் போரடிக்கிற களத்தைத் தாவீது வாங்குகிறான்

2 Samuel 24:162 Samuel 242 Samuel 24:18

King James Version (KJV)
And David spake unto the LORD when he saw the angel that smote the people, and said, Lo, I have sinned, and I have done wickedly: but these sheep, what have they done? let thine hand, I pray thee, be against me, and against my father’s house.

American Standard Version (ASV)
And David spake unto Jehovah when he saw the angel that smote the people, and said, Lo, I have sinned, and I have done perversely; but these sheep, what have they done? let thy hand, I pray thee, be against me, and against my father’s house.

Bible in Basic English (BBE)
And when David saw the angel who was causing the destruction of the people, he said to the Lord, Truly, the sin is mine; I have done wrong: but these are only sheep; what have they done? let your hand be against me and against my family.

Darby English Bible (DBY)
And David spoke to Jehovah when he saw the angel that smote among the people, and said, Behold, it is I that have sinned, and it is I that have committed iniquity; but these sheep, what have they done? let thy hand, I pray thee, be on me, and on my father’s house!

Webster’s Bible (WBT)
And David spoke to the LORD when he saw the angel that smote the people, and said, Lo, I have sinned, and I have done wickedly: but these sheep, what have they done? let thy hand, I pray thee, be against me, and against my father’s house.

World English Bible (WEB)
David spoke to Yahweh when he saw the angel who struck the people, and said, Behold, I have sinned, and I have done perversely; but these sheep, what have they done? Please let your hand be against me, and against my father’s house.

Young’s Literal Translation (YLT)
And David speaketh unto Jehovah, when he seeth the messenger who is smiting among the people, and saith, `Lo, I have sinned, yea, I have done perversely; and these — the flock — what have they done? Let, I pray Thee, Thy hand be on me, and on the house of my father.’

2 சாமுவேல் 2 Samuel 24:17
ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம்பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்.
And David spake unto the LORD when he saw the angel that smote the people, and said, Lo, I have sinned, and I have done wickedly: but these sheep, what have they done? let thine hand, I pray thee, be against me, and against my father's house.

וַיֹּאמֶר֩wayyōʾmerva-yoh-MER
דָּוִ֨דdāwidda-VEED
אֶלʾelel
יְהוָ֜הyĕhwâyeh-VA
בִּרְאֹת֣וֹ׀birʾōtôbeer-oh-TOH
אֶֽתʾetet
הַמַּלְאָ֣ךְ׀hammalʾākha-mahl-AK
הַמַּכֶּ֣הhammakkeha-ma-KEH
בָעָ֗םbāʿāmva-AM
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
הִנֵּ֨הhinnēhee-NAY
אָֽנֹכִ֤יʾānōkîah-noh-HEE
חָטָ֙אתִי֙ḥāṭāʾtiyha-TA-TEE
וְאָֽנֹכִ֣יwĕʾānōkîveh-ah-noh-HEE
הֶֽעֱוֵ֔יתִיheʿĕwêtîheh-ay-VAY-tee
וְאֵ֥לֶּהwĕʾēlleveh-A-leh
הַצֹּ֖אןhaṣṣōnha-TSONE
מֶ֣הmemeh
עָשׂ֑וּʿāśûah-SOO
תְּהִ֨יtĕhîteh-HEE
נָ֥אnāʾna
יָֽדְךָ֛yādĕkāya-deh-HA
בִּ֖יbee
וּבְבֵ֥יתûbĕbêtoo-veh-VATE
אָבִֽי׃ʾābîah-VEE

Cross Reference

சங்கீதம் 74:1
தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?

1 நாளாகமம் 21:16
தாவீது தன் கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.

2 சாமுவேல் 24:10
இவ்விதமாய் ஜனங்களை எண்ணின பின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும், நான் மகாபுத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.

1 பேதுரு 2:24
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

யோவான் 10:11
நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

சகரியா 13:7
பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்போம்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன்.

எசேக்கியேல் 34:23
அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பவனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரோ அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.

எசேக்கியேல் 34:2
மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை; நீ தீர்க்கதரிசனம் உரைத்து அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும்.

ஏசாயா 6:5
அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

சங்கீதம் 51:2
என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.

சங்கீதம் 44:11
நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர்.

யோபு 42:6
ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.

யோபு 7:20
மன்னுயிரைக் காப்பவரே, பாவஞ்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? நான் எனக்குத்தானே பாரமாயிருக்கும்படிக்கு, நீர் என்னை உமக்கு இலக்காக வைத்தது என்ன?

1 இராஜாக்கள் 22:17
அப்பொழுது அவன்: இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம் தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.

ஆதியாகமம் 44:33
இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன்.


Tags ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது அவன் கர்த்தரை நோக்கி இதோ நான்தான் பாவஞ்செய்தேன் நான்தான் அக்கிரமம்பண்ணினேன் இந்த ஆடுகள் என்ன செய்தது உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்
2 Samuel 24:17 in Tamil Concordance 2 Samuel 24:17 in Tamil Interlinear 2 Samuel 24:17 in Tamil Image