Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 4:8 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 4 2 Samuel 4:8

2 சாமுவேல் 4:8
எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் இஸ்போசேத்தின் தலையைக் கொண்டு வந்து, ராஜாவை நோக்கி: இதோ உம்முடைய சத்துருவாயிருந்த சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் தலை; இன்றைய தினம் கர்த்தர் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்காகச் சவுலின் கையிலும் அவன் குடும்பத்தாரின் கையிலும் பழிவாங்கினார் என்றார்கள்.

Tamil Indian Revised Version
எப்ரோனிலிருக்கிற தாவீதிடம் இஸ்போசேத்தின் தலையைக்கொண்டுவந்து, ராஜாவை நோக்கி: இதோ, உம்முடைய உயிரை வாங்கத்தேடின உம்முடைய எதிரியாக இருந்த சவுலின் மகனான இஸ்போசேத்தின் தலை; இன்றையதினம் கர்த்தர் ராஜாவான எங்களுடைய ஆண்டவனுக்காகச் சவுலின் கையிலும் அவனுடைய குடும்பத்தார்களின் கையிலும் பழிவாங்கினார் என்றார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் எப்ரோனை வந்தடைந்தனர். இஸ்போசேத்தின் தலையை தாவீதிடம் கொடுத்தனர். ரிம்மோனின் பிள்ளைகளாகிய ரேகாபும் பானாவும் தாவீது அரசனை நோக்கி, “இதோ உம்மைக் கொல்ல முயன்ற உமது பகைவனாகிய சவுலின் மகன் இஸ்போசேத்தின் தலை, உமக்காக இன்று கர்த்தர் சவுலையும் அவனது குடும்பத்தாரையும் தண்டித்துள்ளார்” என்றனர்.

Thiru Viviliam
இஸ்பொசேத்தின் தலையை எபிரோனில் இருந்த தாவீதிடம் கொண்டு வந்தார்கள். “உமது உயிரைப் பறிக்கத் தேடிய உம் எதிரி சவுலின் மகன் இஸ்பொசேத்தின் தலை இதோ! ஆண்டவர் எம் தலைவராம் அரசர் சார்பாக சவுலையும் அவனுடைய வாரிசையும் பழிவாங்கிவிட்டார்” என்று அவர்கள் கூறினார்கள்.⒫

2 Samuel 4:72 Samuel 42 Samuel 4:9

King James Version (KJV)
And they brought the head of Ishbosheth unto David to Hebron, and said to the king, Behold the head of Ishbosheth the son of Saul thine enemy, which sought thy life; and the LORD hath avenged my lord the king this day of Saul, and of his seed.

American Standard Version (ASV)
And they brought the head of Ish-bosheth unto David to Hebron, and said to the king, Behold, the head of Ish-bosheth, the son of Saul, thine enemy, who sought thy life; and Jehovah hath avenged my lord the king this day of Saul, and of his seed.

Bible in Basic English (BBE)
And they took the head of Ish-bosheth to David in Hebron, and said to the king, Here is the head of Ish-bosheth, the son of Saul your hater, who would have taken your life; the Lord has taken payment for the wrongs of my lord the king from Saul and his seed today.

Darby English Bible (DBY)
And they brought the head of Ishbosheth to David in Hebron, and said to the king, Behold the head of Ishbosheth the son of Saul, thine enemy who sought thy life; and Jehovah has given to my lord the king to be avenged this day of Saul and of his seed.

Webster’s Bible (WBT)
And they brought the head of Ish-bosheth to David to Hebron, and said to the king, Behold the head of Ish-bosheth the son of Saul thy enemy, who sought thy life; and the LORD hath avenged my lord the king this day of Saul and of his seed.

World English Bible (WEB)
They brought the head of Ish-bosheth to David to Hebron, and said to the king, Behold, the head of Ish-bosheth, the son of Saul, your enemy, who sought your life; and Yahweh has avenged my lord the king this day of Saul, and of his seed.

Young’s Literal Translation (YLT)
and bring in the head of Ish-Bosheth unto David in Hebron, and say unto the king, `Lo, the head of Ish-Bosheth, son of Saul, thine enemy, who sought thy life; and Jehovah doth give to my lord the king vengeance this day, of Saul and of his seed.’

2 சாமுவேல் 2 Samuel 4:8
எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் இஸ்போசேத்தின் தலையைக் கொண்டு வந்து, ராஜாவை நோக்கி: இதோ உம்முடைய சத்துருவாயிருந்த சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் தலை; இன்றைய தினம் கர்த்தர் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்காகச் சவுலின் கையிலும் அவன் குடும்பத்தாரின் கையிலும் பழிவாங்கினார் என்றார்கள்.
And they brought the head of Ishbosheth unto David to Hebron, and said to the king, Behold the head of Ishbosheth the son of Saul thine enemy, which sought thy life; and the LORD hath avenged my lord the king this day of Saul, and of his seed.

וַ֠יָּבִאוּwayyābiʾûVA-ya-vee-oo
אֶתʾetet
רֹ֨אשׁrōšrohsh
אִֽישׁʾîšeesh
בֹּ֥שֶׁתbōšetBOH-shet
אֶלʾelel
דָּוִד֮dāwidda-VEED
חֶבְרוֹן֒ḥebrônhev-RONE
וַיֹּֽאמְרוּ֙wayyōʾmĕrûva-yoh-meh-ROO
אֶלʾelel
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
הִנֵּֽהhinnēhee-NAY
רֹ֣אשׁrōšrohsh
אִֽישׁʾîšeesh
בֹּ֗שֶׁתbōšetBOH-shet
בֶּןbenben
שָׁאוּל֙šāʾûlsha-OOL
אֹֽיִבְךָ֔ʾōyibkāoh-yeev-HA
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
בִּקֵּ֖שׁbiqqēšbee-KAYSH
אֶתʾetet
נַפְשֶׁ֑ךָnapšekānahf-SHEH-ha
וַיִּתֵּ֣ןwayyittēnva-yee-TANE
יְ֠הוָהyĕhwâYEH-va
לַֽאדֹנִ֨יlaʾdōnîla-doh-NEE
הַמֶּ֤לֶךְhammelekha-MEH-lek
נְקָמוֹת֙nĕqāmôtneh-ka-MOTE
הַיּ֣וֹםhayyômHA-yome
הַזֶּ֔הhazzeha-ZEH
מִשָּׁא֖וּלmiššāʾûlmee-sha-OOL
וּמִזַּרְעֽוֹ׃ûmizzarʿôoo-mee-zahr-OH

Cross Reference

1 சாமுவேல் 25:29
உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய சத்துருக்களின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்பட்டுப்போம்.

1 சாமுவேல் 23:15
தன் பிராணனை வாங்கத் தேடும்படிக்கு, சவுல் புறப்பட்டான் என்று தாவீது அறிந்தபடியினாலே, தாவீது சீப் வனாந்தரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:20
பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான்.

வெளிப்படுத்தின விசேஷம் 6:10
அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.

லுூக்கா 18:7
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?

மத்தேயு 2:20
நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான்.

சங்கீதம் 71:24
எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.

சங்கீதம் 63:9
என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.

2 சாமுவேல் 22:48
அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.

2 சாமுவேல் 18:31
இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாய் எழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்றான்.

2 சாமுவேல் 18:19
சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான்.

1 சாமுவேல் 24:4
அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான்.

1 சாமுவேல் 20:1
தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என் பிராணனை வாங்கத்தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என் அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான்.

1 சாமுவேல் 19:15
அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டுவாருங்கள் என்றான்.

1 சாமுவேல் 19:2
சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என் தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்று போட வகைதேடுகிறார்; இப்போதும் நாளைக்காலமே நீர் எச்சரிக்கையாயிருந்து, மறைவான இடத்தில் ஒளித்துக்கொண்டிரும்.

1 சாமுவேல் 18:11
அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டுதரம் அவனுக்குத் தப்பினான்.


Tags எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் இஸ்போசேத்தின் தலையைக் கொண்டு வந்து ராஜாவை நோக்கி இதோ உம்முடைய சத்துருவாயிருந்த சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் தலை இன்றைய தினம் கர்த்தர் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்காகச் சவுலின் கையிலும் அவன் குடும்பத்தாரின் கையிலும் பழிவாங்கினார் என்றார்கள்
2 Samuel 4:8 in Tamil Concordance 2 Samuel 4:8 in Tamil Interlinear 2 Samuel 4:8 in Tamil Image