1 ஆதாம், சேத்து, ஏனோசு;

2 கேனான், மகலலேல், எரேது,

3 ஏனோக்கு, மெத்தூசேலா, இலாமேக்கு,

4 நோவா, சேம், காம், எப்பேத்து.⒫

5 எப்பேத்தின் மைந்தர்; கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராசு,

6 கோமேரின் மைந்தர்: அஸ்கெனாசு, இரிப்பாத்து, தோகர்மா.

7 யாவானின் மைந்தர்: எலிசா, தர்சீசு, இத்திம், தோதானிம்.⒫

8 காமின் மைந்தர்: கூசு, எகிப்து, பூத்து, கானான்.

9 கூசின் மைந்தர்: செபா, அவிலா, சப்தா, இரகமா, சப்தக்கா; இரகமாவின் மைந்தர்; சேபா, தெதான்.

10 கூசுக்கு நிம்ரோது பிறந்தார்; அவர் உலகில் ஆற்றல் மிக்கவர் ஆனார்.

11 எகிப்தின் வழிவந்தோர்: லூதியர், அனாமியர், இலகாபியர், நப்துகியர்,

12 பத்ரூசியர், பெலிஸ்கியரின் மூல இனத்தவரான கஸ்லுகியர், கப்தோரியர்.

13 கானானின் வழிவந்தோர்; தலை மகன் சீதோன், இரண்டாம் மகன் கேத்து,

14 மற்றும் எபூசியர், எமோரியர், கிர்காசியர்,

15 இவ்வியர், அர்க்கியர், சீனியர்,

16 அர்வாதியர், செமாரியர், ஆமாத்தியர்.⒫

17 சேமின் மைந்தர்: ஏலாம், அசூர், அர்ப்பகசாது, லூது, ஆராம், ஊசு, ஊல், கெத்தேர், மேசெக்கு,

18 அர்ப்பகசாதுக்குச் சேலா பிறந்தார். சேலாவுக்கு ஏபேர் பிறந்தார்.

19 ஏபேருக்கு இரண்டு மைந்தர் பிறந்தனர்; ஒருவர் பெயர் பெலேகு,* ஏனெனில், அவருடைய நாள்களில் மண்ணகம் பிரிவுற்றது. அவர் சகோதரர் பெயர் யோக்தான்.

20 யோக்தானுக்குப் பிறந்தோர்: அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு,

21 ஆதோராம், ஊசால், திக்லா,

22 ஏபால், அபிமாவேல், சேபா,

23 ஓபீர், அவிலா, யோபாபு; இவர்கள் அனைவரும் யோக்தானின் புதல்வர்.⒫

24 சேம், அர்பகசாது, சேலா,

25 ஏபேர், பெலேகு, இரெயு,

26 செருகு, நாகோர், தெராகு,

27 ஆபிராம் என்ற ஆபிரகாம்.

28 ஆபிரகாமின் மைந்தர்: ஈசாக்கு, இஸ்மயேல்; அவர்களுடைய தலைமுறைகள் பின்வருமாறு:

29 இஸ்மயேலின் தலைமகன் நெபயோத்து, மற்றும் கேதார், அத்பியேல், மிப்சாம்,

30 மிஸ்மா, தூமா, மாசா, அதாது, தேமா,

31 எற்றூர், நாபிசு, கேதமா; இவர்களே இஸ்மயேலின் மைந்தர்.⒫

32 ஆபிரகாமின் மறுமனைவி கெற்றூரா பெற்றெடுத்த மைந்தர்; சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இஸ்பாக்கு, சூவாகு, யோக்சானின் மைந்தர்: சேபா, தெதான்.

33 மிதியானின் மைந்தர்: ஏப்பாகு, ஏப்பேர், அனோக்கு, அபிதா, எல்தாயா; இவர்கள் அனைவரும் கெற்றூராவிடம் பிறந்த புதல்வர்.

34 ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார்; ஈசாக்கின் மைந்தர்: ஏசா, இஸ்ரயேல்.

35 ஏசாவின் புதல்வர்: எலிப்பாசு. இரகுவேல், எயூசு, யாலாம், கோராகு.

36 எலிப்பாசின் புதல்வர்: தேமான், ஓமார், சேபி, காத்தாம், கெனாசு, திம்னா, அமலேக்கு.

37 இரகுவேலின் புதல்வர்: நாகத்து, செராகு, சம்மாகு, மிசா.

38 சேயிரின் மைந்தர்: லோத்தான், சோபால், சிபயோன், அனா, தீசோன், ஏட்சேர், தீசான்.

39 லோத்தானின் புதல்வர்: ஓரி, ஓமாம்; லோத்தானின் சகோதரி திம்னா,

40 சோபாலின் புதல்வர்: அலயான், மானகாத்து, ஏபால், செப்பி, ஓனாம்; சிபயோனின் புதல்வர்: அய்யா, அனா.

41 அனாவின் மகன் தீசோன்; தீசோனின் புதல்வர்: அம்ரான், எஸ்பான், இத்ரான், கெரான்.

42 ஏட்சேரின் புதல்வர்: பில்கான், சகவான், யாக்கான்; தீசானின் புதல்வர்: ஊசு, ஆரான்.

43 இஸ்ரயேல் மக்களை அரசர் ஆட்சி செய்யுமுன் ஏதோம் நாட்டை ஆண்ட அரசர் பெகோரின் பேலோ; இவரது நகரின் பெயர் தின்காபா.

44 பேலோ இறந்தபோது, போஸ்ராவைச் சார்ந்த செராகு மகன் யோவாபு அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.

45 யோவாபு இறந்தபோது, தேமானியர் நாட்டைச் சார்ந்த ஊசாம் அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.

46 ஊசாம் இறந்தபோது, மோவாபு நாட்டில் மிதியானியரை முறியடித்த பெதாதின் மகன் அதாது அரசர் ஆனார். இவரது நகரின் பெயர் அவித்து.

47 அதாது இறந்தபோது மஸ்ரேக்காவைச் சார்ந்த சம்லா அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.

48 சம்லா இறந்தபோது நதியோர இரகபோத்தியர் சாவூல் அரசர் ஆனார்.

49 சாவூல் இறந்தபின் அக்போரின் மகன் பாகால் அனான் அவருக்குப் பதிலாக அரசர் ஆனார்.

50 பாகால் அனான் இறந்தபின், அதாது அவருக்குப் பதிலாக அரசர் ஆனார். அவரது நகரின் பெயர் பாயி; மேசகாபின் பேத்தியும் மத்ரேத்தின் மகளுமான மெகேற்றபேல் என்பவரே அவர் தம் மனைவி.

51 அதாது இறந்தார். ஏதோமின் குடும்பத் தலைவர்கள்; திம்னா, அலியா, எத்தேத்து,

52 ஓகோலிபாமா, ஏலா, பீனோன்.

53 கெனாசு, தேமான், மிபுசார்,

54 மக்தியேல், ஈராம், இவர்களே ஏதோமின் குடும்பத் தலைவர்கள்.

1 Chronicles 1 ERV IRV TRV