மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்
மனம் மகிழ்ந்து துதிக்கிறோம்
மன்னவனே இயேசு ராஜா
மனதில் பூத்து மணம் வீசும் ரோஜா
இயேசு ராஜா சாரோன் ரோஜா
நாற்றமாக இருந்த என்னை
வாசமாக மாற்றினீரே
பாவியாக இருந்த என்னை
பரிசுத்தமாய் மாற்றினீரே
நல்லவரே வல்லவரே
எங்களை வாழவைக்கும்
அன்பு தெய்வம் நீரே
…மகிழ்ச்சியோடு
நெருக்கத்திலே இருந்த என்னை
விசாலத்தில் வைத்தீரே
சேற்றிலிருந்து தூக்கி எடுத்து
கன்மலைமேல் நிறுத்தினீரே
அற்புதரே அதிசயமே
எங்களை வாழவைக்கும்
அன்பு தெய்வம் நீரே
…மகிழ்ச்சியோடு
Makilchchiyodu Thuthikkirom Chords for Keyboard, Guitar and Piano